Tuesday, January 2, 2024

ஐயப்ப சுவாமிக்கான விரதம் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றது? ஐயப்ப பக்தர்களை சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?

 🌺 ஐயப்ப சுவாமிக்கான விரதம் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றது?

 ஐயப்ப பக்தர்களை சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?


 

 

 

 சனீஸ்வரருக்கு பிடித்த நிறம் கருப்பு நிறமாகும். அதனால் தான் சனி கிரகத்தால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து தன்னுடைய பக்தர்களை காத்தருளவே கருப்பு நிற ஆடையை அணிவதற்கு உத்தரவிட்டிருக்கிறார் சபரிமலை ஐயப்பன்.

பொதுவாக சனீஸ்வர பகவான் என்றாலே, கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரின் முகத்திலும் ஒருவிதமான பக்தியும், பயமும் ஏற்படும். இதற்கும் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று பார்க்கலாம்.

 சனிபகவானும், ஐயப்பனும் :

ஒரு சமயம் சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரை பிடிப்பதற்காக சென்றபோது, வழியில் மடக்கிய தர்மசாஸ்தாவான ஐயப்பன், என் பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்? அவருக்கு கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? என்று சனீஸ்வர பகவானை பார்த்து கேட்டார்.

அதற்கு சனீஸ்வரர் எனக்கு ஏழை, பணக்காரர். கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடே கிடையாது. ஏழரை சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் பிடிப்பேன். அது தான் என்னுடைய தர்மம் என்று பதிலளித்தார்.

 ஏழரை சனியின் காலத்தில் சனிபகவான் கொடுக்கும் தண்டனை :

சனீஸ்வர பகவான் ஐயப்பனை பார்த்து, ஒருவருடைய ஏழரை சனியின் காலத்தில் விதவிதமான உணவுகளையும், பழங்களையும் உண்டு மகிழ்ந்தவரை சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன்.

மலர்கள் தூவிய கட்டிலில் ஆடம்பரமாக உறங்கி திளைத்தவரை கட்டாந்தரையிலும், பாறையிலும் உறங்க வைப்பேன்.

என்னதான் அன்யோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் கூட, என்னுடைய பார்வை பட்டாலே இருவரும் பிரிந்து விடுவார்கள்.

கட்டிக்கொள்ள ஒழுங்கான உடைகள் கிடைக்காமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், பன்னீரிலேயே குளித்து திளைத்தவர்களை தண்ணீருக்காக அலைய வைப்பேன்.

இதையெல்லாம் நீங்கள் எப்படி ஒரு மண்டலத்திலேயே தண்டனையாக கொடுக்க முடியும்? என்று கேட்டார்.

 ஐயப்பனின் பதில் :

அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த தர்மசாஸ்தாவான ஐயப்ப சுவாமி, கவலைப்படாதீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தண்டனைகளையும் அளிப்பேன் கேளுங்கள் என்றார்.

என்னுடைய பக்தர்கள் மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒருவேளை உணவையே உண்டு திருப்தியடைவார்கள். வெறும் தரையிலேயே படுத்துறங்குவார்கள். கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரிலேயே நீராடுவார்கள்.

அதோடு, உமக்கு பிடித்த கருப்பு ஆடைகளையே என்னுடைய பக்தர்களை உடுத்த செய்து, காலணிகளை அணிய விடாமல், முடியை திருத்திக்கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மணி மாலையை அணிந்து கொண்டு, சுக துக்கங்களில் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்றே அழைக்க செய்வேன் என்றார்.

 சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?

ஐயப்பன் கூறிய விரத முறைகளை பக்தி பெருக்குடன் ஏற்றுக்கொண்ட சனீஸ்வர பகவான், அன்றிலிருந்து இன்று வரையிலும், ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய பார்வையை செலுத்தாமல் நன்மையை மட்டுமே அளித்து வருகிறார்.

இப்படி சனீஸ்வர பகவானின் பார்வையிலிருந்து தன்னுடைய பக்தர்களை காப்பதற்கே, சனீஸ்வர பகவான் கூறிய தண்டனைகளை கடுமையான விரத முறைகளாக பக்தர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளார் ஐயப்பன்.

சபரிமலை ஐயப்பனை தரிசித்து அவரின் அருளாசியை பெற்று நன்மை பெறுவது அனைவருக்குமே நல்லது.

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...