Showing posts with label தெரிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்வோம். Show all posts

Sunday, March 30, 2025

எந்தெந்த கிழமைகளில் தங்கம் வாங்கலாம்? 12 ராசிக்காரர்கள் நகை வாங்க நல்ல நாட்கள் !! Akshaya tritiya 30 Apr, 2025

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கம் சேரும் என்பதில்லை. புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும்.

மேஷ ராசிக்காரர்கள் - ஞாயிறு, வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் - திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

 


 

கடக ராசிக்காரர்கள் - ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் - திங்கள், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

விருச்சக ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் - வியாழக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

மகர ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் நகை வாங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் - திங்கள் மற்றும் வியாழன் கிழமைகள் நகை வாங்க நல்ல நாட்கள்.

 


 

💰 இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

💰 சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.

💰 அதுமட்டுமல்லாமல், அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்

Tuesday, April 30, 2024

கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

 கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். 

அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம்.

 இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. 

இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?




Wednesday, April 24, 2024

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..

 அகால மரணம் ஏற்படக்கூடாது
என்று ஆசையா?
பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.

'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது

வட இந்தியாவில், வெளி
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.

'யாருமே அகால மரணம்
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.

கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.

இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.

'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.

கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.

அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

. நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.


தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.

ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.

கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.

ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.

வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.

அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.

ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.





அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்கிறது வேத வாக்கு.

விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
 என்று வேதமே சொல்கிறது.

மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.

நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.

அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.

"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் -
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் -
நாம் செய்த 'பாபங்களே'.

'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்
என்று வேதமே சொல்கிறது.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?

பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.

அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது

அகால ம்ருத்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்ற ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து
அருந்த வேண்டும்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

நாளும் ஒரு செய்தி🌺தெரிந்து கொள்வோம் பஞ்சாங்கமும், திதிகளும் !!!🌺 #shortsfeed #sivagamasundari

 > தெரிந்து கொள்வோம் வாங்க... பகுதியில் ...

திதி என்றால் என்ன?
திதி பலன்கள்

பஞ்சாங்கமும், திதிகளும்

ஒவ்வொரு நாளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் தினமும் அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நவக்கிரகங்களின் ஆதார செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, காரணங்களே அடிப்படை ஆதாரமாக உள்ளன.

இந்த ஐந்து அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதே ‘பஞ்சாங்கம். ஆனால் எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியுமா என்றால் தெரியாது. இவை நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடபடுகிறது.

திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதற்குபின் வரும் நாட்களில் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இந்த விலகலானது தினமும் சுமார் 12 டிகிரி வரை இருக்கும். பௌர்ணமி தினத்தன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் சந்திரன் இருக்கும். அதாவது அப்போது சூரியனில் இருந்து 7-வது ராசியில் சந்திரன் இருக்கும். சூரியன் இருந்த இடத்தையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற இடம் 7-வது இடமாக இருக்கும்.

அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் ஆகும். அதேபோல் பௌர்ணமியில் இருந்து திரும்ப அமாவாசைக்கு வர 15 நாட்கள் ஆகும். ஆக மொத்தம் 30 நாட்கள். சந்திரன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் வந்து சேர்ந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஒவ்வொரு திதியாக குறிப்பிடபடுகிறது.

1. பிரதமை

2. துவிதியை

3. திருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி

6. சஷ்டி

7. சப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. திரயோதசி

14. சதுர்த்தசி

15. பௌர்ணமி

16. அமாவாசை


வளர்பிறை, தேய்பிறை திதிகள்:
சந்திரன் அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளாக சிறிது, சிறிதாக வளர்வதால் இவை எல்லாம் வளர்பிறைத் திதிகள் என அழைக்கபடுகின்றன. இந்தப் 15 நாட்களை ‘சுக்கில பக்ஷ்க்ஷம்’ என்பார்கள்.

திதிகள் மொத்தம் எத்தனை:
பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்ந்து கொண்டே வரும், அதன்படி,  முதல் நாள் பெயர் பிரதமையில் இருந்து கடைசி நாளான அம்மாவாசை முடிய வரும், இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இந்த 15 நாட்களை ‘கிருஷ்ணபக்ஷ்க்ஷம்’ என்பார்கள். இவை எல்லாம் நாள், நேரம் பார்க்க உதவும்.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தால் அதை பஞ்சமி திதிக்குள் செய்வது சிறந்ததாகும். ஏனெனில் தேய்பிறை காலமாக இருந்தாலும் பஞ்சமி திதி வரையில் வளர்பிறை காலத்தில் என்ன பலன் கிடைக்குமே அதே போன்ற பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

> மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து படிக்க இந்த blog follow செய்யவும்

Friday, April 12, 2024

தெய்வீக சக்தி அதிகரிக்க வீட்டில் தெய்வ சக்தியை அதிகப்படுத்த

 தெய்வீக சக்தி அதிகரிக்க

வீட்டில் தெய்வ சக்தியை அதிகப்படுத்த


நம் உள்ளத்தில் எந்த தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்கிறோமோ அந்த பூஜைக்குரிய பலனை நம்மால் பெற முடியும். அதேபோல் நம் இல்லத்தில் செய்யக்கூடிய பூஜைகளுக்கும் பலன் இருக்கிறது. இவை இரண்டையும் கோவிலாகவே கருத வேண்டும் என்பது தான் நம்முடைய முன்னோர்கள் வகுத்த வழி. 




அந்த வகையில் வீட்டில் பூஜை செய்யும் பொழுது தெய்வீக சக்தி என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் கூறியிருக்கிறார்கள். என்னதான் பூஜை செய்தாலும் எந்தவித பலனும் இல்லை, செய்யும் காரியங்களில் தடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நல்ல பலன்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் எந்த பூவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தெய்வீக சக்தி என்பது வீட்டில் நிலையாக நிலைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டும். எந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறதோ அந்த வீட்டில் தெய்வீக சக்தி என்பது இருக்கவே இருக்காது. சரி தெய்வீக சக்தி அதிகரிக்க வேண்டும் அதே சமயம் எதிர்மறை ஆற்றல்களையும் விளக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பு. ஏனென்றால் வியாழக்கிழமை வீட்டை சுத்தம் செய்து வைத்திருப்போம். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது முழு பலனையும் நம்மால் பெற முடியும். இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணம் ஒன்று வேண்டும். 

 

அந்த கிண்ணம் நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு ஜவ்வாது பொடியைப் போட வேண்டும். அடுத்ததாக பச்சைக் கற்பூரத்தை நுணுக்கி போட வேண்டும். இதற்கு மேல் ஒரு செந்தாமரை மலரை விரித்து வைக்க வேண்டும். இந்த கண்ணாடி கிண்ணத்தை வீட்டு பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். வரவேற்பரையோ நிலை வாசலிலோ வைக்க கூடாது. தினமும் தங்களால் தாமரை மலரை வாங்க முடியும் அல்லது தங்களுக்கு கிடைக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் இந்த பூவை மாற்றலாம். அவ்வாறு கிடைக்காது என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இந்த பூவை மாற்றி விட வேண்டும். பழைய பூவை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்

இவ்வாறு நாம் ஜவ்வாது, பச்சை கற்பூரம் கலந்த தண்ணீரை பூஜை அறையில் வைக்கும் பொழுது அந்த பூஜை அறையை நறுமணத்துடன் திகழும். தாமரை என்பது தோஷங்கள் அற்ற மலராக கருதப்படுகிறது. இந்த மலரை எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் நாம் வைத்து வழிபடலாம். 

இந்த மலரை நாம் இந்த முறையில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் தெய்வீக சக்தி என்பது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த ஜவ்வாது பச்சை கற்பூரத்திற்குரிய வாசனைக்கு எதிர்மறை ஆற்றல்கள் விலகிப் போகும் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலையில் இப்படி நாம் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு சுத்தமான குங்கிலியத்தை பயன்படுத்தி வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இந்த முறையில் வாரந்தோறும் நாம் செய்து வர நம் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். நினைத்தது நினைத்தபடி நல்ல விதமாக நடந்திடும்.

ஒரே ஒரு பூவை மட்டும் நம் வீட்டில் நாம் கொண்டு வந்து வைத்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்றால் அந்த பூவை வாங்கி வைப்பதில் எந்த தவறும் இல்லை.

Tuesday, April 2, 2024

தீர்க சுமங்கலி பவா என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்.

 🏵🏵🏵🏵🏵🏵🏵
தீர்க சுமங்கலி பவா என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்.  🏵🏵

🌼 தீர்க சுமங்கலி பவா.....!
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.



🌼 திருமணத்தில் ஒன்று,

🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!

🌼 இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசிவீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு

⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும்,
⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,
⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே….

எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம்   (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்

🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼வாழ்க வளமுடன்

நாளும் ஒரு செய்தி🌺ஜென்ம நட்ச்சத்திர மகிமையும்🌺ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவை #shortsfeed











 

Saturday, March 16, 2024

லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.

 ஜ்வாலா மாலினிகா க்ஷிப்தா, வஹ்னி ப்ராகார மத்யகா ‘ என்ற வரிகளை திரும்ப திரும்பத் சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார். கூடியிருந்தவர்கள் இந்த மந்திரத்தை முழங்கினார்கள். சற்று நேரத்தில் மேகங்கள் போன இடமே தெரியவில்லை.
மதுரை மீனாக்ஷி கோவிலில் நவராத்திரியின்போது சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் இப்படி சொன்னார் என்று எங்கோ படித்தேன்.

ஸகஸ்ர நாமத்தில் வருகின்ற பெயர்களுக்கு மந்திர சக்தியும் உண்டு. உதாரணமாக ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமத்தில் வரும் ‘ ஸர்வ வ்யாதி ப்ரசமனி ‘ ‘ ஸர்வ மிருத்யு நிவாரிணீ ‘ என்பது, எல்லா வியாதிகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக உச்சரிக்கப்படுகிறது.



மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும் மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது. ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.

அம்பிகை வழிபாட்டில் அன்பு, எளிமை, ஆர்வம், பக்தி, அடக்கம் ஆகியவையே மிகமிக முக்கியம்.
ஆடம்பரமான பகட்டான ஆரவாரமான பூஜைகளைக் கண்டு அம்பிகை ஏமாறமாட்டாள்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.
அந்தர் முக சமாராத்யா,
பஹிர்முக சுதுர்லபா
அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.




இப்படியே நம்முடைய உயிர் பிரியும் வரை அவள் புகழ் கூறலாம். எனக்கு பேராசை தான் என்கிறீர்களா!! ஆமாம்!! கரும்பு தேன் சுவைக்க அவள் அருள் மட்டுமே என்றென்றும் வேண்டும். இப்பொழுதே சொல்லி பழகி கொண்டால் கண் சொருகி வாய் அடைத்து மூச்சு தொண்டை குழியில் அடைக்கும் தருணம் அவளின் நாம ஜபத்தை, மனமானது ஜபம் செய்யலாம் என்கிற நப்பாசை தான்.
அப்போ கேட்கறேளா!! ஆசை முழுமையாக போகவில்லையா என்று!!  இல்லை. அவள் மீது
உள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஏனென்றால் அவைகளை நாடகம் போல நடத்துபவள் அவளே!! பிறகு எனக்கு என்ன கவலை!! நீயே கதி ஈஸ்வரீ!!

நன்றி ! இணைய தளம் !

தேவி சரணம்....!

தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

 🙏🙏🙏🙏🙏

1. தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

நாம் உறங்கும் திசை இயல்பாக கிழக்கு மேற்காக இருப்பது சிறப்பு. சூரியன் உதிக்கும் திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இது ஆரோக்கியத்தை குறிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.




2. சமையலறையில் சமைக்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

சூரியன் உதிக்கும் திசையில், கிழக்கு முகமாக நின்று சமைக்கும்போது, சூரிய வெளிச்சம் உள்ளே வரும் படியான அமைப்புகளில் நின்று சமைக்கும்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையான உணவாகவும் சமைக்க முடியும் என்று நமது முன்னோர்கள் ஆரோக்கியத்தை மையமாக வைத்து வலியுறுத்தி உள்ளார்கள்.

3. உணவருந்தும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

உணவருந்தும் திசை எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தக்கூடாது என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். காரணம் ஆயுளை மையமாக வைத்தே குறிப்பிட்டுள்ளார்கள்.

4. பூஜையறையில் சாமி படங்களை எப்படி இருப்பது சிறப்பு?

பூஜையறையில் உள்ள விக்ரகங்கள் சாமி படங்கள் வடக்கு முகமாக இருப்பது சிறப்பு. நாம் இறைவனை வணங்கும் போது வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ நின்று பக்கவாட்டில் பிரார்த்தனை செய்யும் பொழுது, அந்த பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து நமது முன்னோர்கள் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்கள்.

5. குழந்தைகள் படிக்கும் அறை எப்படி இருப்பது சிறப்பு?

குழந்தைகள் படிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படித்தால் இயல்பாகவே ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நமது முன்னோர்கள் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.

6. கழிவறையின் கோப்பைகள் மற்றும் குளிக்கும் திசைகள் எப்படி இருப்பது சிறப்பு?

கழிவறையில் உள்ள கோப்பைகள் கிழக்கு மற்றும் மேற்கு முகமாக இருக்கும்பொழுது இறைவனை அவமதிப்பதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் தெற்கு, வடக்காக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். இதே விதிமுறைகள்தான் குளியலறைக்கும்.

7. வரவேற்பறையில் சோபாக்கள் மேஜைகள் எப்படி இருப்பது சிறப்பு?

நம் வீட்டினுள் நுழையும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்கும் பொழுது, நாம் நிற்கும் திசை இயல்பாகவே கிழக்கு-வடக்காக வரவேண்டும் என்பதை மையப்படுத்தி சோபாக்களையும், மேசைகளையும் மேற்கு முகமாகவும் தெற்கு முகமாகவும் அமைத்திருப்பார்கள்.

8. பணம் வைக்கும் பெட்டிகள் எப்படி இருப்பது சிறப்பு?

பணம் வைக்கும் அறை என்பது தென்மேற்கில் வரவேண்டும். அதிலும் குறிப்பாக பணம் வைக்கக்கூடிய பணப்பெட்டி அதாவது பீரோ லாக்கர் போன்றவை வடக்கு முகமாக இருப்பது சிறப்பு.
 உங்களுடைய வீட்டில்,கிழக்கு தலை வைத்து தினமும் தூங்கினால்,செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;அப்படி அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது;எந்த ஒரு திருஷ்டியாலும் தடுக்க முடியாது;

மேற்கே தலைவைத்து தினமும் வீட்டில் தூங்கினால்,ஆயுள் அதிகரிக்கும்;

வடக்கே தலை வைத்து எப்போதும் தூங்கவே கூடாது;நோய்கள் வளரும்;மன நலம் பாதிக்கப்படும்;

தெற்கே தலைவைத்து வீட்டில் தினமும் தூங்கினால்,புகழ் அதிகரிக்கும்;

உங்களுடைய வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும்;

மேற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்;

வடக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் வளரும்;உடலின் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்;

தெற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற வீண் பழிகள் வந்து கொண்டே இருக்கும்;

உணவகங்கள்,மெஸ்கள்,ஆஸ்டல்கள்,சாலையோர உணவகங்களில் சாப்பிடும் போது இந்த விதிகள் பொருந்தாது;

தெற்கு நோக்கி உங்கள் ஆடைகளை துவைத்தால் உங்களுக்கு வீண் சச்சரவுகளில் சிக்கும் சூழ்நிலை அடிக்கடி உண்டாகும்;

ஆண்டிராய்டு யுகமாக இருந்தாலும்,திசைகள் மாறுமா? சித்தர்கள் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகள் இவை;நமது பாரம்பரிய பழக்கத்தை நாம் முறையாக பின்பற்றுவோம்;✍🏼🌹

Friday, March 15, 2024

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

 தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.

மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

"எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!" என வேண்டவே, நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.

முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.

அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

பழம் கொட்டை என்பது கிடையாது.

அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.

நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.✍🏼🌹

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்

 சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்


  • கோயிலுக்கு செல்பவர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
  • நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.
  • சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.
  • சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
  • விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
  • இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
  • பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.
  • கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
  • விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
  • சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.
  • ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
  • மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.
  • நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.
  • நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
  • பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
  • பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
  • நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.



ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்.











 

 

 

ஜென்ம  நட்ச்சத்திர மகிமையும் ,
ஜென்ம நட்சத்திரத்தில்
செய்யவேண்டியவையும்,  ஒரு விரிவான அலசல்...

 
நாம் இந்துக்கள்,
சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள்.  ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.

பிறந்த நட்ச்சத்திரம் , அந்த    நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. .

இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும்    ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.  



அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள் .    

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம்,  (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது.

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.


ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது.  தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்.


                      
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.




ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும்  சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.  அது  ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.

அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம். 



பிறந்த நாளில்  ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ ரகசியமோ இல்லை

Thursday, February 22, 2024

ஒன்பது விதமான பக்தி | தெரிந்து கொள்வோம், நாளும் ஒரு செய்தி

  ஒன்பது விதமான பக்தி

 பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன். ” நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?” என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் ப்ரஹ்லாதன்.

🙏ஸ்ரவணம்,  

🙏கீர்த்தனம்,  விஷ்ணோ:  

🙏ஸ்மரணம்,

🙏 பாதசேவனம்,  

🙏அர்ச்சனம்,  

🙏வந்தனம்,  

🙏தாஸ்யம்  

🙏சத்யம்,  

🙏ஆத்மநிவேதம்.

இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவலக்ஷணா என ஒன்பது வித பக்தியைப் பற்றி அந்தக் குழந்தை சொன்னான். அதில் முதல்பக்தி ச்ரவணபக்தி. காது கொண்டு பகவானைப் பற்றிக் கேளுங்கள்!  பார்க்க வேண்டும் என்றால் கண்களைத் திறக்க வேண்டும். கேட்க வேண்டும் என்பதற்காக காதைத் திறந்தே வைத்திருக்கிறான் பரமாத்மா.எதையும் அநாவசியமாகப் பார்க்காதே; அநாவசியமாகப் பேசாதே என்பதற்காக கண்களும் வாயும் முடியோடு இருக்கின்றன.

🍒 ஆனால் சத் விஷயங்களை மகான்களிடத்தில் கேட்டுக் கொண்டேயிரு. கேட்டால் தான் இந்த ஆத்மா ஷேமத்தை அடையும். கேட்டுக் கேட்டே வரவேண்டும். எல்லாம் படித்தே சம்பாதித்து விட முடியாது. வேதாந்த விஷயங்களை மகான்களிடத்தில் கேட்க வேண்டும். அதனால் தான் காதுக்கு​ மூடியே போடாமல் வைத்துள்ளான்.

🍒 பகவானுடைய பெருமையை நாம் எப்போது கேட்கிறோமோ அன்றிலிருந்து த்யானம் பண்ண வேண்டும்.  

🌺 கேட்டல் என்பதில் பரீக்ஷித்மஹாராஜா மாதிரி கேட்டவர்கள் கிடையாது​.  

🌺 சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

🌺 ஸ்மரணம் பண்ணுவதில் ப்ரஹ்லாதன் மாதிரி ஸ்மரித்தவர்கள் இல்லை .

🌺 பாத சேவனம் பண்ணியதில் மஹாலக்ஷ்மி மாதிரி இல்லை.

🌺 விழுந்து விழுந்து சேவித்ததில் அக்ரூரர் போன்று யாரும் இல்லை.

🌺 புஷ்பத்தை இட்டு பகவானை அர்ச்சித்ததில் த்ருவனுடைய வம்சத்தில் வந்த ப்ருதுசக்ரவர்த்தி போன்று யாரும் இல்லை

🌺 தோழமை கொண்டதில் அர்ஜுனன் போன்று யாரும் இல்லை.

🌺 பகவானுக்கு தாஸனாய் நின்றதில் ஆஞ்சநேயன் மாதிரி யாரும் இல்லை.

🌺 தன்னையே பகவானுக்கு அர்பணித்ததில் பலிசக்ரவர்த்தி மாதிரி யாரும் இல்லை.

ஒன்பது விதமான பக்திக்கு இப்படி ஒன்பது விதமான பேர் காணக் கிடைக்கிறார்கள். இதில் முதல் பக்தி
ஸ்ரவணம் கேட்டல் என்பது வந்துவிட்டால் அதுவே நம்மை உயர்த்திவிடும்.

🍁🌾🍁🌾🍁🌾🍁🌾🍁

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...