Saturday, March 16, 2024

விநாயகர் துதி

   🌹விநாயகர் துதி🙏
               

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே..
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே..
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா..
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா..
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்..
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா..
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே..
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே...

      🌹விநாயகா போற்றி
   விக்னேஸ்வரா போற்றி🙏

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...