Sunday, March 30, 2025

எந்தெந்த கிழமைகளில் தங்கம் வாங்கலாம்? 12 ராசிக்காரர்கள் நகை வாங்க நல்ல நாட்கள் !! Akshaya tritiya 30 Apr, 2025

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கம் சேரும் என்பதில்லை. புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும்.

மேஷ ராசிக்காரர்கள் - ஞாயிறு, வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் - திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

 


 

கடக ராசிக்காரர்கள் - ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் நகை வாங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் - திங்கள், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

விருச்சக ராசிக்காரர்கள் - சனிக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் - வியாழக்கிழமைகளில் நகை வாங்கலாம்.

மகர ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி கிழமைகளில் நகை வாங்கலாம்.

கும்ப ராசிக்காரர்கள் - புதன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் நகை வாங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் - திங்கள் மற்றும் வியாழன் கிழமைகள் நகை வாங்க நல்ல நாட்கள்.

 


 

💰 இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

💰 சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும்.

💰 அதுமட்டுமல்லாமல், அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...