ஏரகப்பதிகம்
ஒரு தரம் சரவணபவா என்று சொல்பவர் உள்ளத்தில்
நினைத்த எல்லாம் உடனே கைகூடும் என வேதங்கள்
மொழியுதே உண்மை அறிவான பொருளே!
பரிவாகவே அநந்தந் தரம் சரவணபவா என்று
நான் சொல்லியும் பங்குமிக காங்கேயா!
அடியனேன் எண்ணியது பலியாதிருப்பது
ஏனோ! குருபரா! முருகய்யா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குகா! சண்முகா! கோலாகலா!வெற்றிவேலா! எனக்கருள்கொடுத்தாளவை முத்தய்யனே!
மருமலர்க்குழலழக! தேவகுஞ்சரி வள்ளி மணவனே!
என் துணைவனே! வண்ண மயில் வாகனா!
பொன் ஏரகப்பதியில் வளர் சுவாமிநாதகுருவே!!
No comments:
Post a Comment