Tuesday, January 30, 2024

ஸ்ரீ முருகன் தரிசனம் தெய்வமணி மாலை

 ஸ்ரீ முருகன் தரிசனம்

தெய்வமணி மாலை

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு
விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு
நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட
நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு
உடை உண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு
சாந்தம்உறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு
தேன் உண்டு வண்டுறு கடம் பணியும் நின்பதத்

தியான முண் டாயில் அரசே  தார் உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே..!

- வள்ளலார்


Friday, January 26, 2024

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் |

 சிவன் வழிபாடு தை  வெள்ளிக்கிழமை இன்று அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் படித்து சிவபெருமானை துதிப்போம் 

 

 


 

 

 

 

 


அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் |  
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பதிகம் | செல்வம் அருளும் அற்புதப் பதிகம் |  
‘பொருள் இல்லார்க்கு அருள் இல்லை’ என்பது அனுபவ மொழி. செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற செல்வத்தை நல்லபடியாக பயன்படுத்தவேண்டும். கண்ணன் அருளால் கிடைக்கப்பெற்ற செல்வத்தை நல்லபடி பயன்படுத்தாத காரணத்தால்தான் குசேலன் காலடியில் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கவும், ஆதிசங்கரரின் அருளால் ஏழ்மை விலகவும் நேர்ந்தது. அப்படி நமக்கு செல்வத்தை அருளக்கூடியதும், செல்வம் நிலைத்திருக்கச் செய்யவும் இந்தப் மந்திரத்தை தினமும் காலையில் குளித்து, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவபெருமானை தியானித்து இந்த மந்திரம் பாராயணம் செய்தால், நிச்சயம் செல்வம் பெற்று சிறப்புற வாழலாம். பலரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை இது.

அத்தகைய அஷ்ட ஐஸ்வர்யங்களையும் செல்வத்தையும் அருளும் இந்தப் பதிகத்தை அருளியவர் திருஞானசம்பந்தர். அவர் எந்தச் சூழ்நிலையில் இந்தப் பதிகத்தைப் பாடினார் என்பதைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.

சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர், இறைவன் அருளால் சிவபக்தியில் சிறந்து ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபெருமானை தேன் தமிழ்ப் பாடல்களால் போற்றி வழிபட்டு வந்தார். அப்படி அவர் திருவாவடுதுறை தலத்துக்கு வந்திருந்தபோது, சீர்காழியில் இருந்த அவருடைய தந்தை சிவபாதஇருதயருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

அந்த சோதனை-

அந்தக் காலத்தில் வேதியராகப் பிறந்தவர்களுக்கு உரிய காலங்களில் வேதங்கள் வகுத்த நெறிமுறைகளின்படி வேள்விகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சிவபாதஇருதயரும் வேள்வி செய்யவேண்டிய காலம் வந்தது. ஆனால், அதற்குத் தேவையான செல்வம் அவரிடம் இல்லை.

சிவபாதருக்கு செல்வம் இல்லாத சிக்கல் என்றால், ஞானசம்பந்தருக்கு தந்தைக்கு செய்யவேண்டிய கடமையில் இருந்து தவறிவிட்ட தர்மசங்கடமான நிலை. உள்ள நிலைமை திருஞானசம்பந்தருக்கு புரிந்தது. ஈசனின் அருளை வேண்டி, ‘இடரினும் தளரினும்’ என்ற பதிகத்தைப் பாடினார்.

பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமானின் ஆணைப்படி சிவபூதம் ஒன்று தோன்றி, அங்கிருந்த பீடத்தின்மேல் ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை வைத்து, ”உமக்கு ஈசன் அளித்த இந்தப் பொற்கிழி உலவா பொற்கிழியாகும். இதில் எடுக்க எடுக்க வளருமே தவிர, குறையாது” என்று சொல்லி மறைந்தது. சிவபெருமானின் அருளால் தான் பெற்ற செல்வத்தை தந்தைக்கு அனுப்பி, ”இதில் உள்ள பொற்காசுகள் எடுக்க எடுக்க குறையாமல் வளரும். இதை உங்கள் வேள்விக்கு மட்டுமல்லாமல், சீர்காழிப் பதியில் உள்ள அனைத்து வேதியர்களும் வேள்வி செய்யப் பயன்படட்டும்” என்று கூறி அனுப்பினார்.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே

Sunday, January 14, 2024

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்?

 சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்?



தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.
சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.

உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள். பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள். 

சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.

தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது.

பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

இதனால்தான் பொங்கல் பண்டிகை "உழவர் திருநாள்" என கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

சூரிய வழிபாடும் பரிகாரமும்......

 சூரிய வழிபாடும் பரிகாரமும்......




சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும்.

தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.

கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

‘ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.


வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம்.

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோவிலுக்கு சென்று வரலாம்.

சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும்.

நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்


Tuesday, January 9, 2024

திருவெம்பாவை

 🔥🕉 #திருவெம்பாவை பாடல் - 23 ( திருப்பெருந்துறையில் அருளியது )
.

கூவின பூங்குயில்; கூவின கோழி;
      குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
      ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
      திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
      எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்

மார்கழி மாதம் |

 🔥🌀🕉 #மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

 

 

 

 

 

 

 

மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

🔥#திருப்பாவைபாடல் - 23
 
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:


எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்


பிரதோஷம் | நோய், கடன் பிரச்சினை தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷம்

 பிரதோஷம்
************************
நோய், கடன் பிரச்சினை தீர்க்கும்
செவ்வாய் கிழமை பிரதோஷம்.
************************
இன்றைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய்     பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே  மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக்கொண்டார் சிவபெருமான். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன் திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும்.

ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும் தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.

இன்றைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய்  பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. ரத்ததானம், அன்ன தானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்ற வை செய்வது நல்லது.
அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மை யான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகல தோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்ணுவிற் கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான்.

எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மரு க்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்ச த்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.

எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்க ளுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்


தேய்பிறை பிரதோஷம் | மார்கழி தமிழ் மாதம் | பிரதோஷ காலம்

 மார்கழி தமிழ் மாதம் தேய்பிறை பிரதோஷம் நன்னாளகும். 

சிவனுக்கு அபிஷேம்
சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று  நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.

பிரதோஷ காலம்..

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்...

இன்றைய தினம் நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்..

திருமண தடை நீங்கும்...


ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் , கடன் பிரச்சனை தீரும், திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

சிவனுக்கு விரதம்...

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.

வில்வ மாலை அர்ச்சனை...

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையதாகும்.

சிவனுக்கு அபிஷேம்...

 


 

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும்,
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்.
பழங்கள் - விளைச்சல் பெருகும்,
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்,
நெய் - முக்தி பேறு கிட்டும்.
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்.
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்,
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.
பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

ஓம் நமசிவாய நமஹா 🙏

தின காயத்ரி | காயத்ரி மந்திரம் | slokas

 தின காயத்ரி 🕉💫🚩

💫செவ்வாய்க்கிழமை


**🟡காயத்ரி மந்திரம்

*ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ ஹை: யோந: ப்ரசோதயாத்..!

🟡விநாயகர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
**வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

******************‌ 

 🟡ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
🕉 ஓம் (குலதெய்வம்) நமஹ

******************‌

*🕉 ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ


🟡சூரிய பகவானின் காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹே
*திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

******************‌

🕉இன்றைய கிழமை காயத்திரி


*✴அங்காரகன் காயத்ரி
ஓம் வீரத்வஜாய வித்மஹேஓம்
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

******************‌


🕉இன்றைய தின நட்சத்திரம்
***✴ கேட்டை நட்சத்திரம்

*ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்*

******************‌

🟡ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*
**ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே
* ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

******************‌

🟡ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

******************‌ 

 🟡நவகிரக மந்திரம்,

ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:
 

******************‌ 

 
🔯🔬நோய்களை குணமாக்குவதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!
🩸🩺தேவாரம்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

******************‌


🩸🩺முருகப் பெருமானின் மந்திரம்
ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!

******************‌


🩸🩺ம்ருத்யுஞ்ச மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
**ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்

******************‌


🩸🩺தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
**தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

Wednesday, January 3, 2024

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே।

 ஜெய் ஶ்ரீ ராம்
🙏🏽🕉🥀✡🌼⿫🌸🌻🙏

ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே !
ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!!

🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏

ஸ்ரீ ராம ராம ராமேதி
   ரமே ராமே மனோரமே।  
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
   ராம நாம வரானனே।।

ஸ்ரீ ராம ராம ராமேதி
   ரமே ராமே மனோரமே।  
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
  ராம நாம வரானனே।।

ஸ்ரீ ராம ராம ராமேதி
   ரமே ராமே மனோரமே।  
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
  ராம நாம வரானனே।

🙏🏽பாண்டவர்களை பார்க்க சென்ற ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா🙏🏽

 சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து
🙏🌹🥀✡🌸*️⃣🌺🕉🙏🏽

🙏🏽பாண்டவர்களை
பார்க்க சென்ற
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா🙏🏽

காட்டில் பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்த சமயத்தில் பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய் பார்த்து விட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார்.

உடனே புறப்பட்டு காட்டுக்குப் போனார்.
அவர்களைப் பார்த்தார். அவர்களுடன் ஒரு இரவு தங்கினார்.

அப்போது பஞ்சபாண்டவர்கள் அவருக்கு காவல் காத்தார்கள்.

இரவு ஒருவர் மாறி ஒருவர் கண்முழித்து காவல் செய்ய வேண்டும்.

முதலில் அர்ஜுனன் காவல் காத்தான்.

எல்லோரும் தூங்குகிறார்கள். அவன் மட்டும் முழித்துக் கொண்டிருக்கிறான்.
அப்போது எதிரிலே ஏதோ ஒரு உருவம் தெரிந்தது.
உற்றுப் பார்த்தான்.
அது ஒரு பூதம். அதுபாட்டுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்தது.

இவன் நேரம் முடிந்துவிட்டது. அடுத்தபடியாக நகுலன் காவல் காக்க வந்தான்.
இப்போதும் அந்த பூதம் கண்ணில் பட்டது.
ஆனால் அது முதல் இருந்ததை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.

அடுத்தபடியாக சகாதேவன் , பீமன் , தருமன் இப்படி மாறி மாறி காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அந்த பூதத்தின் வடிவம் பெரிதாகிக்கொண்டே வந்தது. ஒவ்வொருவரும் அதை கொல்ல முயற்சி செய்தார்கள்.

இரவு காவல் பணியில் பாண்டவர்கள் இப்படி மாறி மாறி இருப்பதை பார்த்ததும் கிருஷ்ணர் தர்மரைப் பார்த்து கேட்டார் ' இந்த காவல் பணியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா? நானும் கொஞ்ச நேரம் கண் விழித்து காவல் காக்கிறேன் '.

இதற்கு தர்மர் சொன்னார் " செய்யுங்கள்.
இந்த உலகத்தையே பாதுகாப்பதும் நீங்கள்தான்.
பாண்டவர்களை பாதுகாப்பதும் நீங்கள்தான்.
இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு நாங்கள் யார்?  என்றார்.

ஒவ்வொருவராக காவல் காத்து முடிந்ததும் போது கிருஷ்ணர் வர வேண்டிய முறை.
காவலுக்கு கிருஷ்ணர் புறப்பட்டார் .

இப்போது தர்மர் சொன்னார் " கிருஷ்ணா காட்டிலே ஒரு பெரிய பூதம் இருக்கிறது.
அது வரவரப் பெரிதாகி கொண்டே வருகிறது.
அது உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கும். அதனாலே நீங்கள் போகாமல் இருப்பது நல்லது " என்றார்.

அதற்கு கிருஷ்ணர் இப்படி என்மேலே உனக்கு சந்தேகம் வரலாமா?  
ஏன் இப்படிப்பட்ட சந்தேகம்.
அது உன்னுடைய பலவீனம்.
நான் நிச்சயமாக காவல் பணி செய்யத்தான் போகிறேன் என்றார்.

 2 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் அவருடைய நேரம்.

3 மணிக்கு மேலே அர்ஜுனன் வர வேண்டும்.
அதனால் மூன்று மணிக்கு அர்ஜுனன் வந்தான்.

அர்ஜுனன் வந்து பார்க்கிறான் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
அவன் பார்க்கிறான் பூதத்தையும் காணும் பிசாசையும் காணோம்.

அர்ஜுனன் கேட்கிறான் " அந்த பூதத்தை அழித்து விட்டாயா? "

இப்போது கிருஷ்ணன் சொல்கிறார் அர்ஜுனா நான் எந்த பூதத்தையும் பிசாசையும் பார்க்கவில்லை.
என் கண்ணுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை.
எதுவுமே நம்முடைய பிரதிபலிப்புதான்.
நம்முடைய கோபம் தான் நமக்கு முன்னால் அரக்கத்தனமாக காட்சியளிக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு கோபம் அதிகரிக்கிறதோ அந்த அளவுக்குச் சமமாக அதுவும் வளர்கிறது.
எனக்கு யார் மீதும் கோபமோ வெறுப்போ இல்லை.

 உண்மையிலேயே நமக்குன்னு யாரும் எதிரிகள் கிடையாது. நம்முடைய குணங்கள் தான் நமக்கு எதிரிகள்.
உள்ளே இருக்கிற உணர்வுகள் தான் நமக்கு பிரதி பிம்பமாக வெளியே தெரிகின்றன.

வெறுப்பே இல்லாமல் எல்லாத்தையும் அன்பால் நிரப்பும்போது நம் கண் முன் அன்புதான் தெரியும் அரக்கன் தெரியமாட்டான் என்றார் கிருஷ்ணர்!

Tuesday, January 2, 2024

ஒரே இராசியில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் !

 ஒரே இராசியில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் !
திருமணமான ஆண், பெண் ஒரே இராசியில் இருந்தால் அவர்களின் வாழ்க்கை!



திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் தங்களுக்கேற்ற வரனை தேர்ந்தெடுப்பதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் ஜோதிடம் என்ற சிறந்த கலையைக் கொண்டு இருவருக்கும் பொருத்தம் உள்ளதா என்பதனை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. திருமணமான ஆண் பெண் ஒரே ராசியில் இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் சண்டை சச்சரவு வந்துக் கொண்டே இருக்கும். திடீரென்று பிரச்சனைகள் வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களிடம் நல்ல இணைப்பு உண்டாகும். இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான கருத்து, ஈடுபாடு இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்கும். ஆனால் இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், மற்றொருவர் சமநிலை இன்றி காணப்படுவார்கள்.

கடகம்

கடக ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் உணர்ச்சிப்பு+ர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருடைய உணர்வை புரிந்து நடந்துக் கொள்வார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியைக் கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் மத்தியில் அதிக முன்கோபம் இருக்கும். இதனால் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமையாக இருப்பதில் பிரச்சனைகள் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாக திகழ்வார்கள்.

துலாம்

துலாம் ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் உறவு பிரிவை தேடி செல்லும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவர் மத்தியில் கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். இவர்களின் வாழ்வில் நம்பிக்கை, பொறாமை, சந்தேகம் போன்றவை உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமையும்.

தனுசு

தனுசு ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவருடன் ஒருவர் அதிக நேரத்தை செலவழித்து கொள்ள விரும்புவார்கள். மேலும் இவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் சிறந்து விளங்குவார்கள்.

மகரம்

மகர ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்பவர்கள். இதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.

மீனம்

மீன ராசியை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவேறு பார்வைகள் கொண்டவர்கள். தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.

ஐயப்ப சுவாமிக்கான விரதம் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றது? ஐயப்ப பக்தர்களை சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?

 🌺 ஐயப்ப சுவாமிக்கான விரதம் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றது?

 ஐயப்ப பக்தர்களை சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?


 

 

 

 சனீஸ்வரருக்கு பிடித்த நிறம் கருப்பு நிறமாகும். அதனால் தான் சனி கிரகத்தால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து தன்னுடைய பக்தர்களை காத்தருளவே கருப்பு நிற ஆடையை அணிவதற்கு உத்தரவிட்டிருக்கிறார் சபரிமலை ஐயப்பன்.

பொதுவாக சனீஸ்வர பகவான் என்றாலே, கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரின் முகத்திலும் ஒருவிதமான பக்தியும், பயமும் ஏற்படும். இதற்கும் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று பார்க்கலாம்.

 சனிபகவானும், ஐயப்பனும் :

ஒரு சமயம் சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரை பிடிப்பதற்காக சென்றபோது, வழியில் மடக்கிய தர்மசாஸ்தாவான ஐயப்பன், என் பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்? அவருக்கு கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? என்று சனீஸ்வர பகவானை பார்த்து கேட்டார்.

அதற்கு சனீஸ்வரர் எனக்கு ஏழை, பணக்காரர். கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடே கிடையாது. ஏழரை சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் பிடிப்பேன். அது தான் என்னுடைய தர்மம் என்று பதிலளித்தார்.

 ஏழரை சனியின் காலத்தில் சனிபகவான் கொடுக்கும் தண்டனை :

சனீஸ்வர பகவான் ஐயப்பனை பார்த்து, ஒருவருடைய ஏழரை சனியின் காலத்தில் விதவிதமான உணவுகளையும், பழங்களையும் உண்டு மகிழ்ந்தவரை சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன்.

மலர்கள் தூவிய கட்டிலில் ஆடம்பரமாக உறங்கி திளைத்தவரை கட்டாந்தரையிலும், பாறையிலும் உறங்க வைப்பேன்.

என்னதான் அன்யோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் கூட, என்னுடைய பார்வை பட்டாலே இருவரும் பிரிந்து விடுவார்கள்.

கட்டிக்கொள்ள ஒழுங்கான உடைகள் கிடைக்காமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், பன்னீரிலேயே குளித்து திளைத்தவர்களை தண்ணீருக்காக அலைய வைப்பேன்.

இதையெல்லாம் நீங்கள் எப்படி ஒரு மண்டலத்திலேயே தண்டனையாக கொடுக்க முடியும்? என்று கேட்டார்.

 ஐயப்பனின் பதில் :

அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த தர்மசாஸ்தாவான ஐயப்ப சுவாமி, கவலைப்படாதீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தண்டனைகளையும் அளிப்பேன் கேளுங்கள் என்றார்.

என்னுடைய பக்தர்கள் மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒருவேளை உணவையே உண்டு திருப்தியடைவார்கள். வெறும் தரையிலேயே படுத்துறங்குவார்கள். கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரிலேயே நீராடுவார்கள்.

அதோடு, உமக்கு பிடித்த கருப்பு ஆடைகளையே என்னுடைய பக்தர்களை உடுத்த செய்து, காலணிகளை அணிய விடாமல், முடியை திருத்திக்கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மணி மாலையை அணிந்து கொண்டு, சுக துக்கங்களில் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்றே அழைக்க செய்வேன் என்றார்.

 சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?

ஐயப்பன் கூறிய விரத முறைகளை பக்தி பெருக்குடன் ஏற்றுக்கொண்ட சனீஸ்வர பகவான், அன்றிலிருந்து இன்று வரையிலும், ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய பார்வையை செலுத்தாமல் நன்மையை மட்டுமே அளித்து வருகிறார்.

இப்படி சனீஸ்வர பகவானின் பார்வையிலிருந்து தன்னுடைய பக்தர்களை காப்பதற்கே, சனீஸ்வர பகவான் கூறிய தண்டனைகளை கடுமையான விரத முறைகளாக பக்தர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளார் ஐயப்பன்.

சபரிமலை ஐயப்பனை தரிசித்து அவரின் அருளாசியை பெற்று நன்மை பெறுவது அனைவருக்குமே நல்லது.

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...