ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் மற்ற தெய்வங்களை பிரார்தனை செய்வதில்லை ❤🙏❤
என்கிற கேள்வியை பலர் கேட்கின்றனர் ❤🙏❤
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமாலை தங்களின் கணவனாக பாவிக்கின்றனர். ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஆத்மாக்கள் அனைவரும் ஸ்த்ரீகளே, அதாவது பெண்களே. ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே புருஷோத்தமன் (ஆண்மகன்) ❤🙏❤
ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஆத்மாவுக்கும் நடக்கும் திருமணமே சரணாகதி ❤🙏❤
எப்படி ஒரு பெண் திருமணமான பின்பு எல்லாம் தன் கணவனே என்று இருப்பாளோ அதே போல ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் அந்தர்யாமியாக இருக்கும் பெருமானான புருஷோத்தமனிடம் ஸ்த்ரீயான ஆத்மா தன்னை சமர்ப்பணம் செய்து, "எந்த நேரத்திலும் தர்ம மார்கத்தை வி்ட்டு விலக மாட்டேன்" என்ற ப்ரதிஜ்ஞையை சரணாகதி என்கிறார்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் ❤🙏❤
கணவனை கைபிடித்த பெண் எப்படி தன் எந்த ஒரு தேவைக்கும் வேறு ஒரு ஆண்மகனிடம் சென்று நிற்க மாட்டாளோ, அதே போல ஸ்ரீவைஷ்ணவர்களும், தங்களுடைய எந்த ஒரு தேவைக்கும் வேறு எந்த தேவதையின் முன்பு வேண்டி நிற்பதில்லை ❤🙏❤
அப்படி செய்தார்களே ஆனால், திருமணமான பெண், மற்றொருவரிடம் சென்று தன்னை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது போலாகும் அல்லவா ❤🙏❤
அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் ஸ்ரீவைஷ்ணவர்கள் இருப்பதனால், தன் கணவனான ஸ்ரீமன் நாராயணனை ஒழிய மற்ற எவரையும் அவர்கள் வணங்குவதில்லை ❤🙏❤
அப்படி அவர்கள் வணங்காமல் இருப்பதனால் பிற தெய்வங்களை பழிக்கின்றனர் என்று சொல்வது ஏற்புடையதல்ல. ஒரு பெண் எல்லாவற்றிற்கும் தன் கணவனை நாடுவதால் அவள் மற்ற எந்த ஆணையும் மதிக்க மாட்டாள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவரவர்களுக்கு அவரவர் கணவன் உயர்த்தி என்பதில் என்ன தவறு? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னால், அப்படியானால் உலகில் உள்ள மற்ற சிசுக்கள் எல்லாம் பித்தளை குஞ்சுகளா என்று கேட்பது எப்படி அபத்தமோ அதே போலத்தான் இதுவும் ❤🙏❤
தன் கணவனிடம் உள்ள அதீத பக்தி, நம்பிக்கை முதலியவற்றால் எப்படி ஒரு பத்தினி தன் கணவனையே எல்லாம் என்று கொண்டு அவனோடு வாழ்கிறாளோ அதே போல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீமன் நாராயணனோடு தன் காலத்தை கழித்து மோக்ஷ பிராப்தி பெறுகின்றார்கள் ❤🙏❤
Thursday, February 22, 2024
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் மற்ற தெய்வங்களை பிரார்தனை செய்வதில்லை ❤🙏❤
Subscribe to:
Post Comments (Atom)
செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:
பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...

-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
Sri Devi Khadgamala Stotram in Tamil ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment