Thursday, February 22, 2024

ஒன்பது விதமான பக்தி | தெரிந்து கொள்வோம், நாளும் ஒரு செய்தி

  ஒன்பது விதமான பக்தி

 பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன். ” நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?” என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் ப்ரஹ்லாதன்.

🙏ஸ்ரவணம்,  

🙏கீர்த்தனம்,  விஷ்ணோ:  

🙏ஸ்மரணம்,

🙏 பாதசேவனம்,  

🙏அர்ச்சனம்,  

🙏வந்தனம்,  

🙏தாஸ்யம்  

🙏சத்யம்,  

🙏ஆத்மநிவேதம்.

இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவலக்ஷணா என ஒன்பது வித பக்தியைப் பற்றி அந்தக் குழந்தை சொன்னான். அதில் முதல்பக்தி ச்ரவணபக்தி. காது கொண்டு பகவானைப் பற்றிக் கேளுங்கள்!  பார்க்க வேண்டும் என்றால் கண்களைத் திறக்க வேண்டும். கேட்க வேண்டும் என்பதற்காக காதைத் திறந்தே வைத்திருக்கிறான் பரமாத்மா.எதையும் அநாவசியமாகப் பார்க்காதே; அநாவசியமாகப் பேசாதே என்பதற்காக கண்களும் வாயும் முடியோடு இருக்கின்றன.

🍒 ஆனால் சத் விஷயங்களை மகான்களிடத்தில் கேட்டுக் கொண்டேயிரு. கேட்டால் தான் இந்த ஆத்மா ஷேமத்தை அடையும். கேட்டுக் கேட்டே வரவேண்டும். எல்லாம் படித்தே சம்பாதித்து விட முடியாது. வேதாந்த விஷயங்களை மகான்களிடத்தில் கேட்க வேண்டும். அதனால் தான் காதுக்கு​ மூடியே போடாமல் வைத்துள்ளான்.

🍒 பகவானுடைய பெருமையை நாம் எப்போது கேட்கிறோமோ அன்றிலிருந்து த்யானம் பண்ண வேண்டும்.  

🌺 கேட்டல் என்பதில் பரீக்ஷித்மஹாராஜா மாதிரி கேட்டவர்கள் கிடையாது​.  

🌺 சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

🌺 ஸ்மரணம் பண்ணுவதில் ப்ரஹ்லாதன் மாதிரி ஸ்மரித்தவர்கள் இல்லை .

🌺 பாத சேவனம் பண்ணியதில் மஹாலக்ஷ்மி மாதிரி இல்லை.

🌺 விழுந்து விழுந்து சேவித்ததில் அக்ரூரர் போன்று யாரும் இல்லை.

🌺 புஷ்பத்தை இட்டு பகவானை அர்ச்சித்ததில் த்ருவனுடைய வம்சத்தில் வந்த ப்ருதுசக்ரவர்த்தி போன்று யாரும் இல்லை

🌺 தோழமை கொண்டதில் அர்ஜுனன் போன்று யாரும் இல்லை.

🌺 பகவானுக்கு தாஸனாய் நின்றதில் ஆஞ்சநேயன் மாதிரி யாரும் இல்லை.

🌺 தன்னையே பகவானுக்கு அர்பணித்ததில் பலிசக்ரவர்த்தி மாதிரி யாரும் இல்லை.

ஒன்பது விதமான பக்திக்கு இப்படி ஒன்பது விதமான பேர் காணக் கிடைக்கிறார்கள். இதில் முதல் பக்தி
ஸ்ரவணம் கேட்டல் என்பது வந்துவிட்டால் அதுவே நம்மை உயர்த்திவிடும்.

🍁🌾🍁🌾🍁🌾🍁🌾🍁

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...