Tuesday, September 17, 2024

எந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்?


எந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்...?
வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுள்களை தரிசித்து வழிபடுவது சிறந்தது. வார நாட்களில் கடைபிடிக்கப்படும் விரதங்களால் கிடைக்கும் பலன்களை பற்றிப் பார்ப்போம்.




ஞாயிற்றுக்கிழமை :

ஞாயிற்றுக்கிழமை நவகிரகத்தின் முதன்மைக் கடவுளான சூரிய பகவானை விரதமிருந்து வழிபடுவது உகந்தது. அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன் நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

திங்கட்கிழமை :


திங்கட்கிழமை விரதம் சோமவார விரதம் என்று அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கட்கிழமை விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யவேண்டும்.

திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

செவ்வாய்க்கிழமை :

செவ்வாய்க்கிழமை அனுமன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.

புதன்கிழமை :

புதன்கிழமை விநாயகப் பெருமானுக்கு உகந்தது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும். எனவே புதன்கிழமை அன்று விநாயகர் கடவுளுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், எந்த ஒரு காரியமும் சிறப்பாக நடக்கும். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு.

புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும். புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.

வியாழக்கிழமை :

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, விஷ்ணு பகவானின் மனைவியான லட்சுமி தேவி ஆகிய கடவுள்களுக்கு உகந்தது. குருபகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும். அந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும்.

வெள்ளிக்கிழமை :

வெள்ளிக்கிழமை விரதம் சுக்கிரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்கிரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.

சனிக்கிழமை
:

சனிக்கிழமை சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். அன்று வெங்கடேச பெருமாளை வழிபட்டால் எல்லாவித சிறப்புகளும் வந்தடையும். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும்.

சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபட்டால், வாழ்கை சிறப்பாக இருக்கும். சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...