Wednesday, February 21, 2024

பிரதோஷ பூஜை பலன்கள் அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே

 🌹இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்து அனைவரையும் காத்தருள்வாய் 🌹

🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே. 🌹

🌎பிரதோஷ பூஜை பலன்கள்🔮

🪸மனிதர்களிடம் அறியாமல் வரும் பாவங்களின் துயரத்தை போக்க ஈசனால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது தான் பிரதோஷம்.

🪸ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.அன்று தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

🪸இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும்,பூமியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம்.அதனால் தான்,இந்த நேரத்தில் மனிதர்களாகிய நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால்,தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும்.

🪸இந்த வகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து வந்தால்,பிரம்மஹத்தி தோஷம் கூட விலகிச் செல்லும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
🪸அந்த வகையில்,பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.

🌅மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா,விஷ்ணு,சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.

🌅ஐந்து பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.

🌅ஏழு பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

🌅பதினொன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும்,மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.

🌅பதிமூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.

🌅21 பிரதோஷங்கள்‌‌தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

🌅33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

🌅77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

🌅108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்.

🌅121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது.

சிவாய நம 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்களுடன் இனிய பிரதோஷ தின நல்வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...