Thursday, February 15, 2024

அண்ணாமலை 🪷அந்தாதி🪷 🔥திருவண்ணாமலை

  அண்ணாமலை
     🪷அந்தாதி🪷
🔥திருவண்ணாமலை🔥

பாகம்:02

பாடல்:09/10..!

பின்னும் அரவு; பிறையோ முடிமேலே
மின்னும்; கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்
களிஇலார் எட்டார் அறி.

பொருள்:🌹

பின்னும் அரவு; பிறையோ முடிமேலே மின்னும்;
கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்கு அளி இலார் எட்டார் அறி.
(பின்னுதல் - தழுவுதல்;
அரவு - பாம்பு;
பிறை - பிறைச்சந்திரன்;
மின்னுதல் - ஒளிவீசுதல்;
வெள் விடை - வெண்ணிற எருது - இடபம்;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அளி - அன்பு; பக்தி;
எட்டுதல் - நெருங்குதல்; கிட்டுதல்;)

🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥
🔥அருணாச்சல🔥

நற்றுணை யாவது நமச்சிவாயவே!

No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...