Monday, February 26, 2024

Sri Devi Khadgamala Stotram in Tamil

 ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram)மிகவும் சக்தி வாய்ந்த, ஆற்றல் மிக்க, மந்திர அதிர்வுகளைக் கொண்ட ஸ்தோத்ரம்.

  ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் தெய்வங்களின் பெயர்களைத் தன்னகத்தே கொண்டது. தேவி என்றால் ‘சக்தி’ வடிவான தெய்வீக அன்னை. கட்க – பாதுகாப்பு தரும் ஆயுதம் ( வாள் ), கவசம் போன்றது, மாலா – மாலை. ஸ்தோத்ரம் – கீர்த்தனை அல்லது ஸ்துதி , பாட்டு ஆகும்.

 


 

ஶ்ரீ தேவீ ப்ரார்தந
ஹ்ரீஂகாராஸநகர்பிதாநலஶிகாம் ஸௌஃ க்லீம் களாம் பிப்ரதீம்
ஸௌவர்ணாம்பரதாரிணீம் வரஸுதாதௌதாம் த்ரிநேத்ரோஜ்ஜ்வலாம் |
வந்தே புஸ்தகபாஶமஂகுஶதராம் ஸ்ரக்பூஷிதாமுஜ்ஜ்வலாம்
த்வாம் கௌரீம் த்ரிபுராம் பராத்பரகளாம் ஶ்ரீசக்ரஸஂசாரிணீம் ‖

அஸ்ய ஶ்ரீ ஶுத்தஶக்திமாலாமஹாமந்த்ரஸ்ய, உபஸ்தேந்த்ரியாதிஷ்டாயீ வருணாதித்ய ருஷயஃ தேவீ காயத்ரீ சந்தஃ ஸாத்விக ககாரபட்டாரகபீடஸ்தித காமேஶ்வராஂகநிலயா மஹாகாமேஶ்வரீ ஶ்ரீ லலிதா பட்டாரிகா தேவதா, ஐம் பீஜம் க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம் மம கட்கஸித்த்யர்தே ஸர்வாபீஷ்டஸித்த்யர்தே ஜபே விநியோகஃ, மூலமந்த்ரேண ஷடங்கந்யாஸம் குர்யாத் |

த்யாநம்
ஆரக்தாபாந்த்ரிணேத்ராமருணிமவஸநாம் ரத்நதாடஂகரம்யாம்
ஹஸ்தாம்போஜைஸ்ஸபாஶாஂகுஶமதநதநுஸ்ஸாயகைர்விஸ்புரந்தீம் |
ஆபீநோத்துங்கவக்ஷோருஹகலஶலுடத்தாரஹாரோஜ்ஜ்வலாங்கீம்
த்யாயேதம்போருஹஸ்தாமருணிமவஸநாமீஶ்வரீமீஶ்வராணாம் ‖

லமித்யாதிபஂச பூஜாம் குர்யாத், யதாஶக்தி மூலமந்த்ரம் ஜபேத் |

லம் – ப்ருதிவீதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை கந்தம் பரிகல்பயாமி – நமஃ
ஹம் – ஆகாஶதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை புஷ்பம் பரிகல்பயாமி – நமஃ
யம் – வாயுதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை தூபம் பரிகல்பயாமி – நமஃ
ரம் – தேஜஸ்தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை தீபம் பரிகல்பயாமி – நமஃ
வம் – அம்ருததத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை அம்ருதநைவேத்யம் பரிகல்பயாமி – நமஃ
ஸம் – ஸர்வதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகாயை தாம்பூலாதிஸர்வோபசாராந் பரிகல்பயாமி – நமஃ

ஶ்ரீ தேவீ ஸம்போதநம் (1)
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் நமஸ்த்ரிபுரஸுந்தரீ,

ந்யாஸாங்கதேவதாஃ (6)
ஹ்ருதயதேவீ, ஶிரோதேவீ, ஶிகாதேவீ, கவசதேவீ, நேத்ரதேவீ, அஸ்த்ரதேவீ,

திதிநித்யாதேவதாஃ (16)
காமேஶ்வரீ, பகமாலிநீ, நித்யக்லிந்நே, பேருண்டே, வஹ்நிவாஸிநீ, மஹாவஜ்ரேஶ்வரீ, ஶிவதூதீ, த்வரிதே, குலஸுந்தரீ, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்களே, ஜ்வாலாமாலிநீ, சித்ரே, மஹாநித்யே,

திவ்யௌககுரவஃ (7)
பரமேஶ்வர, பரமேஶ்வரீ, மித்ரேஶமயீ, உட்டீஶமயீ, சர்யாநாதமயீ, லோபாமுத்ரமயீ, அகஸ்த்யமயீ,

ஸித்தௌககுரவஃ (4)
காலதாபஶமயீ, தர்மாசார்யமயீ, முக்தகேஶீஶ்வரமயீ, தீபகலாநாதமயீ,

மாநவௌககுரவஃ (8)
விஷ்ணுதேவமயீ, ப்ரபாகரதேவமயீ, தேஜோதேவமயீ, மநோஜதேவமயி, கள்யாணதேவமயீ, வாஸுதேவமயீ, ரத்நதேவமயீ, ஶ்ரீராமாநந்தமயீ,

ஶ்ரீசக்ர ப்ரதமாவரணதேவதாஃ
அணிமாஸித்தே, லகிமாஸித்தே, கரிமாஸித்தே, மஹிமாஸித்தே, ஈஶித்வஸித்தே, வஶித்வஸித்தே, ப்ராகாம்யஸித்தே, புக்திஸித்தே, இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, ஸர்வகாமஸித்தே, ப்ராஹ்மீ, மாஹேஶ்வரீ, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டே, மஹாலக்ஷ்மீ, ஸர்வஸஂக்ஷோபிணீ, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வவஶஂகரீ, ஸர்வோந்மாதிநீ, ஸர்வமஹாஂகுஶே, ஸர்வகேசரீ, ஸர்வபீஜே, ஸர்வயோநே, ஸர்வத்ரிகண்டே, த்ரைலோக்யமோஹந சக்ரஸ்வாமிநீ, ப்ரகடயோகிநீ,

ஶ்ரீசக்ர த்விதீயாவரணதேவதாஃ
காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹஂகாராகர்ஷிணீ, ஶப்தாகர்ஷிணீ, ஸ்பர்ஶாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கந்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்ம்ருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்ருதாகர்ஷிணீ, ஶரீராகர்ஷிணீ, ஸர்வாஶாபரிபூரக சக்ரஸ்வாமிநீ, குப்தயோகிநீ,

ஶ்ரீசக்ர த்ருதீயாவரணதேவதாஃ
அநங்ககுஸுமே, அநங்கமேகலே, அநங்கமதநே, அநங்கமதநாதுரே, அநங்கரேகே, அநங்கவேகிநீ, அநங்காஂகுஶே, அநங்கமாலிநீ, ஸர்வஸஂக்ஷோபணசக்ரஸ்வாமிநீ, குப்ததரயோகிநீ,

ஶ்ரீசக்ர சதுர்தாவரணதேவதாஃ
ஸர்வஸஂக்ஷோபிணீ, ஸர்வவித்ராவிநீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வஹ்லாதிநீ, ஸர்வஸம்மோஹிநீ, ஸர்வஸ்தம்பிநீ, ஸர்வஜ்ரும்பிணீ, ஸர்வவஶஂகரீ, ஸர்வரஂஜநீ, ஸர்வோந்மாதிநீ, ஸர்வார்தஸாதிகே, ஸர்வஸம்பத்திபூரிணீ, ஸர்வமந்த்ரமயீ, ஸர்வத்வந்த்வக்ஷயஂகரீ, ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமிநீ, ஸம்ப்ரதாயயோகிநீ,

ஶ்ரீசக்ர பஂசமாவரணதேவதாஃ
ஸர்வஸித்திப்ரதே, ஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியஂகரீ, ஸர்வமங்களகாரிணீ, ஸர்வகாமப்ரதே, ஸர்வதுஃகவிமோசநீ, ஸர்வம்ருத்யுப்ரஶமநி, ஸர்வவிக்நநிவாரிணீ, ஸர்வாங்கஸுந்தரீ, ஸர்வஸௌபாக்யதாயிநீ, ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமிநீ, குலோத்தீர்ணயோகிநீ,

ஶ்ரீசக்ர ஷஷ்டாவரணதேவதாஃ
ஸர்வஜ்ஞே, ஸர்வஶக்தே, ஸர்வைஶ்வர்யப்ரதாயிநீ, ஸர்வஜ்ஞாநமயீ, ஸர்வவ்யாதிவிநாஶிநீ, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே, ஸர்வாநந்தமயீ, ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ, ஸர்வேப்ஸிதபலப்ரதே, ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமிநீ, நிகர்பயோகிநீ,

ஶ்ரீசக்ர ஸப்தமாவரணதேவதாஃ
வஶிநீ, காமேஶ்வரீ, மோதிநீ, விமலே, அருணே, ஜயிநீ, ஸர்வேஶ்வரீ, கௌளிநி, ஸர்வரோகஹரசக்ரஸ்வாமிநீ, ரஹஸ்யயோகிநீ,

ஶ்ரீசக்ர அஷ்டமாவரணதேவதாஃ
பாணிநீ, சாபிநீ, பாஶிநீ, அஂகுஶிநீ, மஹாகாமேஶ்வரீ, மஹாவஜ்ரேஶ்வரீ, மஹாபகமாலிநீ, ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமிநீ, அதிரஹஸ்யயோகிநீ,

ஶ்ரீசக்ர நவமாவரணதேவதாஃ
ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே, ஸர்வாநந்தமயசக்ரஸ்வாமிநீ, பராபரரஹஸ்யயோகிநீ,

நவசக்ரேஶ்வரீ நாமாநி
த்ரிபுரே, த்ரிபுரேஶீ, த்ரிபுரஸுந்தரீ, த்ரிபுரவாஸிநீ, த்ரிபுராஶ்ரீஃ, த்ரிபுரமாலிநீ, த்ரிபுரஸித்தே, த்ரிபுராம்பா, மஹாத்ரிபுரஸுந்தரீ,

ஶ்ரீதேவீ விஶேஷணாநி – நமஸ்காரநவாக்ஷரீச
மஹாமஹேஶ்வரீ, மஹாமஹாராஜ்ஞீ, மஹாமஹாஶக்தே, மஹாமஹாகுப்தே, மஹாமஹாஜ்ஞப்தே, மஹாமஹாநந்தே, மஹாமஹாஸ்கந்தே, மஹாமஹாஶயே, மஹாமஹா ஶ்ரீசக்ரநகரஸாம்ராஜ்ஞீ, நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமஃ |

பலஶ்ருதிஃ
ஏஷா வித்யா மஹாஸித்திதாயிநீ ஸ்ம்ருதிமாத்ரதஃ |
அக்நிவாதமஹாக்ஷோபே ராஜாராஷ்ட்ரஸ்யவிப்லவே ‖

லுண்டநே தஸ்கரபயே ஸங்க்ராமே ஸலிலப்லவே |
ஸமுத்ரயாநவிக்ஷோபே பூதப்ரேதாதிகே பயே ‖

அபஸ்மாரஜ்வரவ்யாதிம்ருத்யுக்ஷாமாதிஜேபயே |
ஶாகிநீ பூதநாயக்ஷரக்ஷஃகூஷ்மாண்டஜே பயே ‖

மித்ரபேதே க்ரஹபயே வ்யஸநேஷ்வாபிசாரிகே |
அந்யேஷ்வபி ச தோஷேஷு மாலாமந்த்ரம் ஸ்மரேந்நரஃ ‖

தாத்ருஶம் கட்கமாப்நோதி யேந ஹஸ்தஸ்திதேநவை |
அஷ்டாதஶமஹாத்வீபஸம்ராட்போக்தாபவிஷ்யதி ‖

ஸர்வோபத்ரவநிர்முக்தஸ்ஸாக்ஷாச்சிவமயோபவேத் |
ஆபத்காலே நித்யபூஜாம் விஸ்தாராத்கர்துமாரபேத் ‖

ஏகவாரம் ஜபத்யாநம் ஸர்வபூஜாபலம் லபேத் |
நவாவரணதேவீநாம் லலிதாயா மஹௌஜநஃ ‖

ஏகத்ர கணநாரூபோ வேதவேதாங்ககோசரஃ |
ஸர்வாகமரஹஸ்யார்தஃ ஸ்மரணாத்பாபநாஶிநீ ‖

லலிதாயாமஹேஶாந்யா மாலா வித்யா மஹீயஸீ |
நரவஶ்யம் நரேந்த்ராணாம் வஶ்யம் நாரீவஶஂகரம் ‖

அணிமாதிகுணைஶ்வர்யம் ரஂஜநம் பாபபஂஜநம் |
தத்ததாவரணஸ்தாயி தேவதாப்ருந்தமந்த்ரகம் ‖

மாலாமந்த்ரம் பரம் குஹ்யம் பரம் தாம ப்ரகீர்திதம் |
ஶக்திமாலா பஂசதாஸ்யாச்சிவமாலா ச தாத்ருஶீ ‖

தஸ்மாத்கோப்யதராத்கோப்யம் ரஹஸ்யம் புக்திமுக்திதம் ‖

‖ இதி ஶ்ரீ வாமகேஶ்வரதந்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே தேவீகட்கமாலாஸ்தோத்ரரத்நம் ஸமாப்தம் ‖

Thursday, February 22, 2024

ஒன்பது விதமான பக்தி | தெரிந்து கொள்வோம், நாளும் ஒரு செய்தி

  ஒன்பது விதமான பக்தி

 பக்தியிலே ஒன்பது விதமான பக்தி பற்றி பேசுகிறான் ப்ரஹ்லாதன். ” நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?” என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் ப்ரஹ்லாதன்.

🙏ஸ்ரவணம்,  

🙏கீர்த்தனம்,  விஷ்ணோ:  

🙏ஸ்மரணம்,

🙏 பாதசேவனம்,  

🙏அர்ச்சனம்,  

🙏வந்தனம்,  

🙏தாஸ்யம்  

🙏சத்யம்,  

🙏ஆத்மநிவேதம்.

இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவலக்ஷணா என ஒன்பது வித பக்தியைப் பற்றி அந்தக் குழந்தை சொன்னான். அதில் முதல்பக்தி ச்ரவணபக்தி. காது கொண்டு பகவானைப் பற்றிக் கேளுங்கள்!  பார்க்க வேண்டும் என்றால் கண்களைத் திறக்க வேண்டும். கேட்க வேண்டும் என்பதற்காக காதைத் திறந்தே வைத்திருக்கிறான் பரமாத்மா.எதையும் அநாவசியமாகப் பார்க்காதே; அநாவசியமாகப் பேசாதே என்பதற்காக கண்களும் வாயும் முடியோடு இருக்கின்றன.

🍒 ஆனால் சத் விஷயங்களை மகான்களிடத்தில் கேட்டுக் கொண்டேயிரு. கேட்டால் தான் இந்த ஆத்மா ஷேமத்தை அடையும். கேட்டுக் கேட்டே வரவேண்டும். எல்லாம் படித்தே சம்பாதித்து விட முடியாது. வேதாந்த விஷயங்களை மகான்களிடத்தில் கேட்க வேண்டும். அதனால் தான் காதுக்கு​ மூடியே போடாமல் வைத்துள்ளான்.

🍒 பகவானுடைய பெருமையை நாம் எப்போது கேட்கிறோமோ அன்றிலிருந்து த்யானம் பண்ண வேண்டும்.  

🌺 கேட்டல் என்பதில் பரீக்ஷித்மஹாராஜா மாதிரி கேட்டவர்கள் கிடையாது​.  

🌺 சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

🌺 ஸ்மரணம் பண்ணுவதில் ப்ரஹ்லாதன் மாதிரி ஸ்மரித்தவர்கள் இல்லை .

🌺 பாத சேவனம் பண்ணியதில் மஹாலக்ஷ்மி மாதிரி இல்லை.

🌺 விழுந்து விழுந்து சேவித்ததில் அக்ரூரர் போன்று யாரும் இல்லை.

🌺 புஷ்பத்தை இட்டு பகவானை அர்ச்சித்ததில் த்ருவனுடைய வம்சத்தில் வந்த ப்ருதுசக்ரவர்த்தி போன்று யாரும் இல்லை

🌺 தோழமை கொண்டதில் அர்ஜுனன் போன்று யாரும் இல்லை.

🌺 பகவானுக்கு தாஸனாய் நின்றதில் ஆஞ்சநேயன் மாதிரி யாரும் இல்லை.

🌺 தன்னையே பகவானுக்கு அர்பணித்ததில் பலிசக்ரவர்த்தி மாதிரி யாரும் இல்லை.

ஒன்பது விதமான பக்திக்கு இப்படி ஒன்பது விதமான பேர் காணக் கிடைக்கிறார்கள். இதில் முதல் பக்தி
ஸ்ரவணம் கேட்டல் என்பது வந்துவிட்டால் அதுவே நம்மை உயர்த்திவிடும்.

🍁🌾🍁🌾🍁🌾🍁🌾🍁

உபவாச விரதங்களில் எதை கடைபிடித்தால் நல்லது

 

 உபவாச விரதங்களில் எதை கடைபிடித்தால் நல்லது




27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது புராணத்தில் அவை

  1. உமிழ்நீரை கூட விழுங்காமல் இருப்பது இதை யோகிகள் மட்டுமே கடைபிடிப்பார்கள்
  2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  3.  பசுவின் பாலில் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  4. எந்த உணவும் இல்லாமல் தொடர்ந்து 12 நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்
  6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  8.  மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  9. மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாசாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  10.  மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  11.  கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கலாம்
  12. மூன்று நாட்கள் பகல்வேளை மூன்று கைப்பிடி உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  13.  இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  14. ஒரு நாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளு புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  15. ஒருநாள் இரவில் மட்டும் பசும்பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் 
  16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  18.  ஒருநாள் முழுவதும் பொறி மாவு அதாவது புழுங்கல அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய் தேங்காய் சக்கரை ஆகியவற்றை போட்டு பிசைந்து வைத்து இதை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  19.  ஒருநாள் முழுவதும் தினை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடித்து திரும்ப தேய்பிறை நாட்கள் வரை தினமும் ஒரு கைபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அண்ணத்தை அதிகமாகி கொண்டு சுக்லபற்ற முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அண்ணமாக குறைப்பது என இது ஒரு வகை உபவாசம் நிறுத்தல்
  21. ஒரு நாள் முழுவதும் வில்வத் தழையையும் நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல் 
  22. ஒரு நாள் முழுவதும் அரச இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல் 
  23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும் நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்
  24. இருவேளை உணவுடன் உபவாசம் இருத்தல்
  25. முதல் நாள் ஒருவேளை பகல் உணவு மட்டும் மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்
  26. மாமிச உணவுகள் மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்
  27. வாழைக்காய் பூண்டு வெங்காயம் பெருங்காயம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்

இந்த உபவாச விரதங்களை எதை கடைபிடித்தால் நல்லது என்கிறீர்களா

உங்கள் உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் அதுவே உங்கள் முடிவாகும்


ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் மற்ற தெய்வங்களை பிரார்தனை செய்வதில்லை ❤🙏❤

 ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏன் மற்ற தெய்வங்களை பிரார்தனை செய்வதில்லை ❤🙏❤

 என்கிற கேள்வியை பலர் கேட்கின்றனர் ❤🙏❤

ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமாலை தங்களின் கணவனாக பாவிக்கின்றனர். ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஆத்மாக்கள் அனைவரும் ஸ்த்ரீகளே, அதாவது பெண்களே. ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே புருஷோத்தமன் (ஆண்மகன்) ❤🙏❤

ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஆத்மாவுக்கும் நடக்கும் திருமணமே சரணாகதி ❤🙏❤

 எப்படி ஒரு பெண்  திருமணமான பின்பு எல்லாம் தன் கணவனே என்று இருப்பாளோ அதே போல ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் அந்தர்யாமியாக இருக்கும் பெருமானான புருஷோத்தமனிடம் ஸ்த்ரீயான ஆத்மா தன்னை சமர்ப்பணம் செய்து, "எந்த நேரத்திலும் தர்ம மார்கத்தை வி்ட்டு விலக மாட்டேன்" என்ற ப்ரதிஜ்ஞையை சரணாகதி என்கிறார்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் ❤🙏❤

கணவனை கைபிடித்த பெண் எப்படி தன் எந்த ஒரு தேவைக்கும் வேறு ஒரு ஆண்மகனிடம் சென்று நிற்க மாட்டாளோ, அதே போல ஸ்ரீவைஷ்ணவர்களும், தங்களுடைய எந்த ஒரு தேவைக்கும் வேறு எந்த தேவதையின் முன்பு வேண்டி நிற்பதில்லை ❤🙏❤

அப்படி செய்தார்களே ஆனால், திருமணமான பெண், மற்றொருவரிடம் சென்று தன்னை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது போலாகும் அல்லவா ❤🙏❤

அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் ஸ்ரீவைஷ்ணவர்கள் இருப்பதனால், தன் கணவனான ஸ்ரீமன் நாராயணனை ஒழிய மற்ற எவரையும் அவர்கள் வணங்குவதில்லை ❤🙏❤

அப்படி அவர்கள் வணங்காமல் இருப்பதனால் பிற தெய்வங்களை பழிக்கின்றனர் என்று சொல்வது ஏற்புடையதல்ல. ஒரு பெண் எல்லாவற்றிற்கும் தன் கணவனை நாடுவதால் அவள் மற்ற எந்த ஆணையும் மதிக்க மாட்டாள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவரவர்களுக்கு அவரவர் கணவன் உயர்த்தி என்பதில் என்ன தவறு? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னால், அப்படியானால் உலகில் உள்ள மற்ற சிசுக்கள் எல்லாம் பித்தளை குஞ்சுகளா என்று கேட்பது எப்படி அபத்தமோ அதே போலத்தான் இதுவும் ❤🙏❤

தன் கணவனிடம் உள்ள அதீத பக்தி, நம்பிக்கை முதலியவற்றால் எப்படி ஒரு பத்தினி தன் கணவனையே எல்லாம் என்று கொண்டு அவனோடு வாழ்கிறாளோ அதே போல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீமன் நாராயணனோடு தன் காலத்தை கழித்து மோக்ஷ பிராப்தி பெறுகின்றார்கள் ❤🙏❤

*மஹாலக்ஷ்மி தாயிடம் சரணாகதி🌹தெரிந்து கொள்வோம்,

 *மஹாலக்ஷ்மி தாயிடம் சரணாகதி🌹

 மஹாலெட்சுமி தாயிடம் சரணாகதி அடையும்போது, அவள் நம்மை கடாக்ஷிப்பதுடன், அவளுடைய ஸ்தானத்துக்கு நம்மையும் உயர்த்தி விடுவாள். இதுதான் மஹாலக்ஷ்மியின் கருணை!


 

 

 

 

 

அவளைத் தேடித்தேடிச் சரணடைய, உரிய தலங்களை நாம் நாடியோட வேண்டும். இங்கே அத்தகைய சில தலங்கள் பற்றி, குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.

கடிகாசலம் என்னும் சோளிங்கர் திருத்தலத்தில் தாயாருக்கு அமிர்தவல்லி நாச்சியார் என்று திருநாமம். தன்னையே அமிர்தமாக அந்த யோக நரஸிம்மருக்குக் கொடுத்தவள். மஹாலக்ஷ்மியாகிய அமிர்தவல்லி நாச்சியார் பெருமாளின் திருமார்பில் நீங்காமல் இருப்பதால், பக்தர்களை எல்லாம் கூப்பிட்டு அனுக்கிரஹம் பண்ணுவதுபோல் பெருமாள் திருக்காட்சி தருகிறார்.

அதேபோல், கமலாதேவி என்னும் திருப்பெயர் கொண்டு மஹாலக்ஷ்மி எழுந்தருளி இருக்கும் திருத்தலம் உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில். இங்கே பிராட்டிக்கு கமலவல்லி என்ற திருநாமம். இந்தத் தலத்தில்தான் திருப்பாணாழ்வார் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாலக்ஷ்மி தாயார் எத்தனையோ திவ்வியதேசங்களில் எழுந்தருளி நம்மையெல்லாம் கடாக்ஷிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த திவ்வியதேசங்களில் மகாலக்ஷ்மி தாயாருடன் தாயின் அம்சமான பூமிதேவி, நீளாதேவியும் உடன் இருந்தாலும் மகாலக்ஷ்மியே பிரதானம். பகவான் எப்போதும் இந்த மூன்று தாயாருடனே திருக்காட்சி தருவார். இதனையே நம்மாழ்வார்,

‘உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள்ஆயர்மடமகள் என்றிவர் மூவர்…’   என்றும்,

‘கூந்தல்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் குலக்கொழுந்துக்கும் கேள்வன்தன்னை…’

என்றும் பாடி இருக்கிறார்.


மகாலக்ஷ்மி தாயாரின் கடாக்ஷம் நமக்கெல்லாம் கிடைக்கச் செய்யும் எத்தனையோ பல திவ்வியதேசங்கள் நம்முடைய புண்ணியபூமியில் அமைந்திருக்கின்றன. அப்படி இருக்க, மகாலக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா… ஆனால், கிடைக்கவில்லையே? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

சிந்தித்தால், நாம் பரிபூரணமாக அவளிடம் சரணாகதி பண்ணவில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்.
ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரை சொல்லி வந்த விபீஷணன், இரண்ய வதத்தைப் பற்றி குறிப்பிடும்போது,  இரண்ய வதத்தினால் நரஸிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட சினத்தின் உக்கிரத்தைத் தணிவிக்க, தேவர்கள் மகாலக்ஷ்மி பிராட்டியாரை நரஸிம்ம பெருமாளுக்கு அருகில் அனுப்பி வைத்து சினத்தின் உக்கிரத்தைத் தணிவித்ததாக கூறினான். இதைப் பற்றி விவரிக்க வந்த கம்பர்,

’பூவில் திருவை அழகின் கமலத்தை!
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை! ஆவித்துணையை அமுதின் பிறந்தாளை! தேவர்க்கும் தாயை…’


அதாவது, தாமரை மலரின்மேல் இருந்தபடி அருளும் அந்த தேவியானவள், அமுதத்தோடு பிறந்தவள்; அனைவருக்கும் செல்வத்தை அருள்பவள்; வீடு என்னும் பேரின்பத்தையும் நமக்கெல்லாம் அருள்பவள் என்று போற்றுகிறார்.

இந்திரனுக்கு அவன் இழந்த செல்வத்தைத் திரும்பவும் அருளியவள் கருணையே வடிவான மகாலக்ஷ்மி தாயார். அவளுடைய திருக்கோயில்களை நாடிச் சென்று அவளுடைய திருவடிகளைச் சரண் அடைந்தால், அவளுடைய கடாக்ஷம் நமக்கெல்லாம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளே சரணம்🌷


நரசிம்மர் திருப்பெயர்கள் | Names of Lord Nrusimha






 

 

 

 

 

 

 

 

 

நரசிம்மர் திருப்பெயர்கள்....


 Names of Lord Nrusimha

  1. அகோபில நரசிம்மர்    Ahobila Nrusimhar 
  2. அழகிய சிங்கர்  Azaghiya Singar
  3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் Anantha Veera Vikrama Nrusimha
  4. உக்கிர நரசிம்மர்  Ugra Nrusimha
  5. கதலி நரசிங்கர்    Kadali Nrusimha
  6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்  Kadali Lakshmi Nrusima
  7. கதிர் நரசிம்மர்  Kadir Nrusimhar
  8. கருடாத்ரிலக்ஷ்மி நரசிம்மர் Garudadri Laxminrusimha
  9. கல்யாண நரசிம்மர் Kalyana Nrusimha
  10. குகாந்தர நரசிம்மர்  Gugandara Nrusimha
  11. குஞ்சால நரசிம்மர் Kunjala Nrusimha
  12. கும்பி நரசிம்மர் Kumbi Nrussimhar
  13. சாந்த நரசிம்மர் Santha Nrusimhar
  14. சிங்கப் பெருமாள்  Singaperumal
  15. தெள்ளிய சிங்கர்  Thilliyasingar
  16. நரசிங்கர் Narasingar
  17. பானக நரசிம்மர் Panaka Nrusimhar
  18. பாடலாத்ரி நரசிம்மர் Padaladhri Nrusimhar
  19. பார்க்கவ நரசிம்மர் Bhargava Nrusimhar
  20. பாவன நரசிம்மர் Pavana Nrusimhar
  21. பிரஹ்லாத நரசிம்மர் Prahlada Nrusimhar
  22. பிரஹ்லாத வரத நரசிம்மர் Prahlada Varada Nrusimhar
  23. பூவராக நரசிம்மர்  Boovaraha Nrussimhar
  24. மாலோல நரசிம்மர் Malola Nrusimhar
  25. யோக நரசிம்மர்  Yoga Nrusimhar
  26. லட்சுமி நரசிம்மர் Laxmi Nrusimhar
  27. வரதயோக நரசிம்மர்  Varadayoga Nrusimhar
  28. வராக நரசிம்மர்  Varaha Nrusimhar
  29. வியாக்ர நரசிம்மர்  Viyakra Nrusimhar
  30. ஜ்வாலா நரசிம்மர்  Jwala Nrusimhar

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...