Tuesday, April 30, 2024

பிறவிப்பெரும் பேறு

பிறவிப்பெரும் பேறு☝🏻👇🏻

ஒரு சமயம் பாண்டிய மன்னன் வல்லப தேவன் இரவு, நகர் வலம் சென்றான்.

ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். அவரருகே சென்று எழுப்பி, "பெரியவரே தாங்கள் யார்.?" என வினவினான்.

நான் புனித கங்கையில் நீராடி விட்டு, சேதுக் கரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்," என்றார் முதியவர். 




"ஓ...அப்படியா ? மிக்க மகிழ்ச்சி. ஆன்மிகப் பற்றுடைய தாங்கள் ஏதாவது ஸ்லோகம் சொன்னால் நன்றாக இருக்கும்," என்றான் மன்னன்.

முதியவர் சுலோகமும் சொல்லி அதற்கான பொருளையும் சொன்னார்.

"மழைக் காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாய் வாழ ,மற்ற எட்டு மாதத்திலும்  உழைக்க வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலிலும், முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் தேட வேண்டும். அதே போல அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேட வேண்டியது அவசியம்," என்றார் முதியவர் .

அவரை வணங்கி வழியனுப்பி வைத்த மன்னன். முதியவர் சொன்ன முதல் மூன்று விஷயங்களை முடித்து விட்டேன். அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியிலேயே தேடுதல் என்றால் என்ன....!! என்று குழம்பியவாறே, அரண்மனைக்குச் சென்றான்.

மறுநாள் குலகுரு செல்வ நம்பியையும், பண்டிதப் பெரு மக்கள் பலரையும் அழைத்து , இது குறித்து விசாரித்த போது யாரும், மன்னனின் சந்தேகத்தைப் போக்க இயல வில்லை.

மன்னன் ஒரு மூங்கிலின் உச்சியில் ஒரு பொற்காசு முடிப்பைக் கட்டி ,அரண்மனை வாசலில் நடுமாறும், மன்னனின் சந்தேகத்தை தெளிவுறச் செய்வோர்களுக்கு இந்தப் பொற் காசுகள் அடங்கிய முடிச்சு இலவசம் என்றும் அறிவிக்கச் செய்தான்.

அன்றைய இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் 


 

 


 

பெரியாழ்வார்  கனவில் பெருமாள் தோன்றி," பரம் பொருளைத் தொழுது அருளைப் பெறுதலே ,அடுத்த பிறவிக்கான தேவை," என்று சொல்லி மன்னன்  சந்தேகம் போக்கும் படி கூறி மறைந்தார்.

பெரியாழ்வாரும் அதன்படியே அரண்மனையருகே வந்து ,வாசலில் மூங்கில் மரமருகே நின்றபடி, வல்லப தேவனை அழைத்து, " மன்னா,! நாராயணனே பரம்பொருள், இப்பிறவியில் அவரை வணங்கி அருள் பெறுதலே அடுத்த பிறவிக்கான தேடல்  ஆகும்," என்று சொல்லி முடிக்கும் தறு வாயில் மூங்கில் மரம்வளைந்து தாழ்ந்து பொற்காசு முடிச்சை நீட்டியது.

மன்னனும் ஆச்சரியமடைந்து பெரியாழ்வாரின் கருத்தை ஏற்றான். அதே நேரத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் காட்சியளித்தார்.

அப்போது தான் ஆழ்வாரும் பல்லாண்டு பல்லாண்டு எனத் தொடங்கும் பாசுரம் பாடினார்.

 ஓம் நமோ நாராயணாய " என்ற மந்திரம் சொல்லி வழி பட்டால் பல்லாண்டு நலமுடன் வாழலாம். இதுவே பிறவியில் கிட்டும் பெரும் பேறு -
கோவிந்தா ஹரி கோவிந்தா !
நாராயண நாராயண


கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

 கடைகளில் விற்கும் பலகாரங்களை சுவாமிக்கு நைவேத்யம் செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்யம் என்பது தயாரிக்கப்படுவதிலிருந்து பூஜை செய்யப்படும் வரை மற்றவர்கள் பார்ப்பது கூட தவறு என்கிறது சாஸ்திரம். 

அதாவது தயாரிப்பவரையும் பூஜை செய்பவரையும் தவிர, வீட்டிற்கும் சரி, கோயிலுக்கும் சரி, ஒரே சட்டம் தான். கோயிலில் நைவேத்யம் செய்யும்போது திரை போட்டுவிட்டுச் செய்வதைக் காணலாம்.

 இதற்குப் பல காரணங்கள் உண்டு. சுவாமிக்கு நிவேதனம் செய்யும் முன் வேறு யாரும் அதை சாப்பிடக்கூடாது. நைவேத்யத்தின் வாசனையை மற்றவர்கள் முகர்ந்து விடுவதால் ஏற்படும் தோஷத்திற்குக் கூட பரிகாரம் செய்யச் சொல்லப்பட்டுள்ளது. 

இவ்வளவு சட்டங்களும் கோயில் மடப்பள்ளிக்கு என்று இருக்கும் போது கடைகளில் வாங்கி நைவேத்யம் செய்வது எப்படிப் பொருந்தும்?




Slokas from Vishnu sahasranamam விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள் முடிந்த போதெல்லாம் கூறுங்கள் நன்மை அடையுங்கள் ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)











 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 













 

அஸ்வத்தாமனை சரியாக புரிந்து கொள்ளாத துரியோதனன் மகாபாரதம் / Mahabharatham

 அஸ்வத்தாமனை சரியாக புரிந்து கொள்ளாத துரியோதனன்

மஹாபாரதத்தில் நிச்சயம்
இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது..

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய்.

சந்தேககம், சந்தோஷத்தின் எதிரி.

இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

கவுவரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும்
யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது.

இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான்.


 

 


 

 

 

யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும்.

அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன்.

சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.

அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான்.

இதை துரியோதனன்
பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன்,
தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான்.

அது பூமியில் விழுந்தது.

அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன்.

கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான்.

அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான்.

பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதை பார்த்த துரியோதனன், ‘நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்’ என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்.

இந்த சந்தேகத்தால்,அவனை, கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை.

17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்தகளத்தில் இருந்தான்.

அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான்,

‘நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை சேனாதிபதியாக நியமித்திருந்தால்,
யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்’ என்றான் அஸ்வத்தாமன்.

அதற்கு துரியோதனன்,
‘நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே’ என, கேட்டான்.

‘யார் சத்தியம் செய்தது’ என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன்.

இதை கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான்.

‘கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது.

அதை தான் எடுத்து கொடுத்தேன்.

சத்தியம் எதுவும் செய்யவில்லை.

என் மீது சந்தேகப்பட்டு,
உன் தோல்வியை தேடி கொண்டாய்.

அப்போதே இது பற்றி
என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது தெரிந்திருக்கும்.

இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்’ என்றான் அஸ்வத்தாமன்.

உண்மைதான்; சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தபட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.

Thursday, April 25, 2024

மகாபாரதம் பகுதி - 1

[14/2, 5:29 am] null: கும்பிடுவது_என்பது🙏 ..

நமது பஞ்சேந்திரியங்கள் ( கண், காது, முக்கு, வாய், உடல் ) எப்போதும் வெளியே பயணித்துக்கொண்டே இருக்கும் ..
அப்படியான
இந்த பஞ்சேந்திரியங்கள் வழியே கிடைக்கும் அனுபவம் எல்லாம் நம்முள்ளே அந்த பஞ்சேந்திரியங்களின் மூலத்தோடு தொடர்பு படுத்தி ..

நம் மனம் ( நாம் பெற்ற அனுபவங்களின் குவியல் )..
நம் புத்தி ( நாம் கற்ற / பெற்ற அறிவு )..
கொண்டு எதையாவது ஆராய்கிறேன் என்று நம்மை ஓர் நிலையில்லா உணர்வு நிலையில் நம்மை அலைக்கழிக்கும் ..

இப்படி இந்த நிலையில் நாம் ஆட்படும்போது ..
வெளியே இந்த பஞ்சேந்திரியங்கள் என்ற புலன்கள் வழியே உணரப்படுவதே நம்மை ஆளும்..
இதில் நம்முள்ளே ஓர் நிலையில்லா தன்மையை ..
அதாவது பாவனை தன்மையில் நம்மை நிலைநிறுத்தும் ..

அதுவே கும்பிடுகிறோம் என்ற போது
நமது ஐந்து விரல்களாலும் ஒன்றோடு ஒன்று பிணைக்க ..
நம் கண்களாய் மூட !!

இந்த பஞ்சேந்திரியங்கள் என்று புலன்கள் புறத்தேடல் கடந்து உள்முகமாக ( நமக்குளேயே ) அதன் மூலத்தை நோக்கி பயணிக்க ..

உங்கள் எண்ணம், உணர்வு, மனம், போன்றவை அலைக்கழிப்பு என்ற சிதறல்கள் எல்லாம் ஒன்று கூடி ..
அவையெல்லாம் கடந்து உங்கள் உள்ள மூலத்தை அதாவது கட உள்ளை ( கடவுளை ) உணர்விக்கும் ..

அதுவரையில் அலைந்து, அலைக்கழித்த, ஓர் நிலையில் இல்லாது அல்லாடிக்கொண்டு இருந்த அத்தனையும் அடங்கும் ..

அதுவும் இந்த கும்பிடுதல் ..
பிரபஞ்ச ஆற்றலை கூட்டுவிக்கும், குவித்திருக்கும் இடங்களான ஆலயம், கோயில் போன்ற இடங்களில்
இடம்பெறும்போது நீங்கள் உங்களுள் ஆடுவது, அலைக்கழித்தது எல்லாம் அடங்கி ..
இந்த பிரபஞ்ச பேராற்றல் என்ற இறைப்பேற்றாற்றல் உங்களுள் நிறைய ..
உங்களுள் ஓர் சூனியம் ( ஏதுமற்ற நிலை ) சில வினாடிகளாவது உங்களை ஆக்கிரமிக்கும் ..

அப்படி இந்த பிரபஞ்ச இறையாற்றல் உங்களுள் ஒவ்வொரு அணுவாய் ஊடுருவ ..
உங்கள் நீங்கள் இதுவரை அனுபவித்திராத ஓர் சக்தி, தெம்பு, தைரியம், துணிவு, தெளிவு போன்றவை உணர்விக்க படும் ..

கும்பிடுகிறேன் என்பதில் இத்தனை நிகழ்கிறது ..

அனுபவித்து அறிந்து உணர வேண்டிய அற்புதம் இது ..

வாழ்க வளமுடன் !

சர்வம் விஷ்ணு மயம்🙏🌹
[19/2, 4:16 pm] null: 🙏திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள்   *குபேரனுக்கு படியளந்த நாள் (மாசிமாதம் 9ம் தேதி) 21/02/2024(புதன்கிழமை)

🙏🌹🙏 திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்  நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்து நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.
குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று தாமிரபரணி நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.
வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
தனிச்சிறப்பு:
நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.

அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம்  : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம்  : வைகாநச ஆகமம்
விமானம்  ஸ்ரீகர விமானம்
சிறப்பு செய்தி:
குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது,
மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று என்பதாகும்.
இந்த நாள் இந்த வருடத்தில் புதன்கிழமை 21/02/2024. செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் *அன்றைய  தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.
[19/2, 4:21 pm] null: ஸ்ரீராமஜெயம்

*மஹாலக்ஷ்மி தாயிடம் சரணாகதி🌹

 மஹாலெட்சுமி தாயிடம் சரணாகதி அடையும்போது, அவள் நம்மை கடாக்ஷிப்பதுடன், அவளுடைய ஸ்தானத்துக்கு நம்மையும் உயர்த்தி விடுவாள். இதுதான் மஹாலக்ஷ்மியின் கருணை!

அவளைத் தேடித்தேடிச் சரணடைய, உரிய தலங்களை நாம் நாடியோட வேண்டும். இங்கே அத்தகைய சில தலங்கள் பற்றி, குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.

கடிகாசலம் என்னும் சோளிங்கர் திருத்தலத்தில் தாயாருக்கு அமிர்தவல்லி நாச்சியார் என்று திருநாமம். தன்னையே அமிர்தமாக அந்த யோக நரஸிம்மருக்குக் கொடுத்தவள். மஹாலக்ஷ்மியாகிய அமிர்தவல்லி நாச்சியார் பெருமாளின் திருமார்பில் நீங்காமல் இருப்பதால், பக்தர்களை எல்லாம் கூப்பிட்டு அனுக்கிரஹம் பண்ணுவதுபோல் பெருமாள் திருக்காட்சி தருகிறார்.

அதேபோல், கமலாதேவி என்னும் திருப்பெயர் கொண்டு மஹாலக்ஷ்மி எழுந்தருளி இருக்கும் திருத்தலம் உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில். இங்கே பிராட்டிக்கு கமலவல்லி என்ற திருநாமம். இந்தத் தலத்தில்தான் திருப்பாணாழ்வார் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாலக்ஷ்மி தாயார் எத்தனையோ திவ்வியதேசங்களில் எழுந்தருளி நம்மையெல்லாம் கடாக்ஷிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த திவ்வியதேசங்களில் மகாலக்ஷ்மி தாயாருடன் தாயின் அம்சமான பூமிதேவி, நீளாதேவியும் உடன் இருந்தாலும் மகாலக்ஷ்மியே பிரதானம். பகவான் எப்போதும் இந்த மூன்று தாயாருடனே திருக்காட்சி தருவார். இதனையே நம்மாழ்வார்,

‘உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள்ஆயர்மடமகள் என்றிவர் மூவர்…’   என்றும்,

‘கூந்தல்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் குலக்கொழுந்துக்கும் கேள்வன்தன்னை…’

என்றும் பாடி இருக்கிறார்.

மகாலக்ஷ்மி தாயாரின் கடாக்ஷம் நமக்கெல்லாம் கிடைக்கச் செய்யும் எத்தனையோ பல திவ்வியதேசங்கள் நம்முடைய புண்ணியபூமியில் அமைந்திருக்கின்றன. அப்படி இருக்க, மகாலக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா… ஆனால், கிடைக்கவில்லையே? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

சிந்தித்தால், நாம் பரிபூரணமாக அவளிடம் சரணாகதி பண்ணவில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்.
ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரை சொல்லி வந்த விபீஷணன், இரண்ய வதத்தைப் பற்றி குறிப்பிடும்போது,  இரண்ய வதத்தினால் நரஸிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட சினத்தின் உக்கிரத்தைத் தணிவிக்க, தேவர்கள் மகாலக்ஷ்மி பிராட்டியாரை நரஸிம்ம பெருமாளுக்கு அருகில் அனுப்பி வைத்து சினத்தின் உக்கிரத்தைத் தணிவித்ததாக கூறினான். இதைப் பற்றி விவரிக்க வந்த கம்பர்,

’பூவில் திருவை அழகின் கமலத்தை!
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை! ஆவித்துணையை அமுதின் பிறந்தாளை! தேவர்க்கும் தாயை…’

அதாவது, தாமரை மலரின்மேல் இருந்தபடி அருளும் அந்த தேவியானவள், அமுதத்தோடு பிறந்தவள்; அனைவருக்கும் செல்வத்தை அருள்பவள்; வீடு என்னும் பேரின்பத்தையும் நமக்கெல்லாம் அருள்பவள் என்று போற்றுகிறார்.

இந்திரனுக்கு அவன் இழந்த செல்வத்தைத் திரும்பவும் அருளியவள் கருணையே வடிவான மகாலக்ஷ்மி தாயார். அவளுடைய திருக்கோயில்களை நாடிச் சென்று அவளுடைய திருவடிகளைச் சரண் அடைந்தால், அவளுடைய கடாக்ஷம் நமக்கெல்லாம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளே சரணம்🌷

Wednesday, April 24, 2024

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..

 அகால மரணம் ஏற்படக்கூடாது
என்று ஆசையா?
பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?..

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.

'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது

வட இந்தியாவில், வெளி
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.

'யாருமே அகால மரணம்
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.

கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.

இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.

'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.

கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.

அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

. நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.


தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.

ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.

கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.

ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.

வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.

அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.

ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.





அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்கிறது வேத வாக்கு.

விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
 என்று வேதமே சொல்கிறது.

மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது,
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.

நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.

அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன்,
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.

"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் -
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் -
நாம் செய்த 'பாபங்களே'.

'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு,
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும்
என்று வேதமே சொல்கிறது.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?

பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.

அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது

அகால ம்ருத்யு ஹரணம்
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்ற ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து
அருந்த வேண்டும்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏

நாளும் ஒரு செய்தி🌺கோயில்களில் பரிகார வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் பலரும் !!!🌺 #shortsfeed



 

நாளும் ஒரு செய்தி🌺தெரிந்து கொள்வோம் பஞ்சாங்கமும், திதிகளும் !!!🌺 #shortsfeed #sivagamasundari

 > தெரிந்து கொள்வோம் வாங்க... பகுதியில் ...

திதி என்றால் என்ன?
திதி பலன்கள்

பஞ்சாங்கமும், திதிகளும்

ஒவ்வொரு நாளின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் தினமும் அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நவக்கிரகங்களின் ஆதார செயல்களுக்கு அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, காரணங்களே அடிப்படை ஆதாரமாக உள்ளன.

இந்த ஐந்து அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதே ‘பஞ்சாங்கம். ஆனால் எல்லோருக்கும் பஞ்சாங்கம் பார்க்க தெரியுமா என்றால் தெரியாது. இவை நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடபடுகிறது.

திதி என்றால் என்ன?

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதற்குபின் வரும் நாட்களில் சந்திரன் தினமும் சூரியனில் இருந்து விலகிச் சென்று கொண்டே இருக்கும். இந்த விலகலானது தினமும் சுமார் 12 டிகிரி வரை இருக்கும். பௌர்ணமி தினத்தன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் சந்திரன் இருக்கும். அதாவது அப்போது சூரியனில் இருந்து 7-வது ராசியில் சந்திரன் இருக்கும். சூரியன் இருந்த இடத்தையும் சேர்த்து எண்ணினால் சந்திரன் நின்ற இடம் 7-வது இடமாக இருக்கும்.

அமாவாசையில் இருந்து பௌர்ணமி முடிய 15 நாட்கள் ஆகும். அதேபோல் பௌர்ணமியில் இருந்து திரும்ப அமாவாசைக்கு வர 15 நாட்கள் ஆகும். ஆக மொத்தம் 30 நாட்கள். சந்திரன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 30 நாட்களில் திரும்பவும் சூரியனுடன் வந்து சேர்ந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஒவ்வொரு திதியாக குறிப்பிடபடுகிறது.

1. பிரதமை

2. துவிதியை

3. திருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி

6. சஷ்டி

7. சப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. திரயோதசி

14. சதுர்த்தசி

15. பௌர்ணமி

16. அமாவாசை


வளர்பிறை, தேய்பிறை திதிகள்:
சந்திரன் அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளாக சிறிது, சிறிதாக வளர்வதால் இவை எல்லாம் வளர்பிறைத் திதிகள் என அழைக்கபடுகின்றன. இந்தப் 15 நாட்களை ‘சுக்கில பக்ஷ்க்ஷம்’ என்பார்கள்.

திதிகள் மொத்தம் எத்தனை:
பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாகத் தேய்ந்து கொண்டே வரும், அதன்படி,  முதல் நாள் பெயர் பிரதமையில் இருந்து கடைசி நாளான அம்மாவாசை முடிய வரும், இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இந்த 15 நாட்களை ‘கிருஷ்ணபக்ஷ்க்ஷம்’ என்பார்கள். இவை எல்லாம் நாள், நேரம் பார்க்க உதவும்.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதாக இருந்தால் அதை பஞ்சமி திதிக்குள் செய்வது சிறந்ததாகும். ஏனெனில் தேய்பிறை காலமாக இருந்தாலும் பஞ்சமி திதி வரையில் வளர்பிறை காலத்தில் என்ன பலன் கிடைக்குமே அதே போன்ற பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

> மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து படிக்க இந்த blog follow செய்யவும்

Tuesday, April 16, 2024

இன்றைய சுபாஷிதம் 16.04.2024 SUBHASHITAMS

 இன்றைய சுபாஷிதம்

अन्तःकरणतत्त्वस्य दम्पत्योः स्नेह्संश्रयात् I
आनन्दग्रन्थिरेकोऽयं अपत्यमिति बध्यते II

அந்த: கரணதத்வஸ்ய தம்பத்யோ: ஸ்நேஹசம்ஷ்ரயாத் I
ஆனந்த க்ரந்திரேகோயம் அபத்யமிதி பந்தயேத் II

கணவன்-மனைவி இருவரது மனமும் ஒன்றிணைவதால் ஏற்படும் மகிழ்ச்சியின் உறுதியான வெளிப்பாடு அபத்யம் (சந்ததி) என்று அழைக்கப்படுகிறது. இது அவர்கள் இருவரின் அன்பையும் ஒன்றிணைக்கிறது

ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை!

 ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை!



பக்தி கதை!



ஒருநாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார்.

“ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?

திரிலோக சஞ்சாரியே!
என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்.

”நாரதர் சிரித்தார். “ஏன் சிரிக்கிறாய் நாரதா?

நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய். என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது.

 

 

 

 

 

 

 

 

 


 

 

எனக்கு புரியவில்லையே?

எப்படி புரியும்?புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!”

நாரதா நிஜம்-நிழல் என்கிறாய்.

என் ராமர் நிழலா?”ஆம் வேறென்ன?

நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார்.

வேறு அவதாரம் தொடங்கிவிட்டாரே!
இந்த புது யுகத்தில்!!

என்ன சொல்கிறாய் நாரதா?

என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்?சொல்லேன்?

“இந்த துவாபர யுகத்தில்
அவர் பெயர் கிருஷ்ணன் த்வாரகையில் உள்ளார்.

சமீபத்தில் அவரிடம் பேசும்போது தான் உன்னை பற்றியும் பேச்சு வந்தது.

“என் பிரபு என்னை நினைத்து கொண்டிருக்கிறாரா?

கேட்கவே ரொம்ப புளகாங்கிதம் அடைகிறேன்.

நான் என் பிரபுவை உடனே பார்க்க வேண்டுமே!

உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் இப்படிப்
போக முடியாது.

ராமநவமியன்று மாறு வேடத்தில் துவாரகைக்கு வா. அன்னதானம் செய். நான் அப்புறம் உன்னை பார்க்கிறேன் என்று கூறி நாரதன் நகர்ந்தான்.

ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான்.

துவாரகையில் ஸ்ரீராம நவமி அன்று அன்னதானம் அளித்தான்.

எண்ணற்றவர்களுக்கு
தன் கையாலேயே அன்னமிட்டான்.

வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன்
குனிந்து ஸ்ரத்தையோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான்.

இன்று ராமரைக் காணலாம் என்றாரே நாரதர்? எப்போது ராமரைப் பார்ப்பது? அவரை எங்கே சந்திப்பது?எங்கே போய் தேடுவது?மனதில் எண்ண ஓட்டம்.

இருந்தாலும் கை அன்னத்தை பரிமாறிக் கொண்டு இருந்தது.

ராமனையே த்யானம் செய்துகொண்டு ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஹனுமான் அனைவருக்கும் தானே உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஆஞ்சநேயனுக்கு தலை சுற்றியது,கை கால்கள் தானாக துவண்டது.

மூச்சு வாங்கியது, என்ன ஆயிற்று எனக்கு?

ஆஞ்சநேயனுக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்றோ புரிபட வில்லை.

ஒரு வரிசையில் ஒரு கால் மடக்கி மறுகாலை கொஞ்சம் நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் அப்போது ஆஞ்சநேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு பரிமாற நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.

ஏன்? ஏன்? இது எதற்காக?

நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?” ஆஞ்சநேயன் கதறினான்.

அந்த மனிதரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சயமானவை.

சாக்ஷாத் ராமனின் கால்கள்”.

பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்? அலறினான் ஆஞ்சநேயன்,

பிராமணர் சிரித்தார்.

மெதுவாக எழுந்தார்.

அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார்.

கிழ பிராமணர் வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை ஆரத்தழுவி கொண்டார்.

நீண்ட பிரிவல்லவா?

ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை வந்தது.

எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.

”“பிரபு எனக்கு ஒரு வருத்தம்!”

என்ன ஆஞ்சநேயா?

நான் உடனே துவாரகைக்கு வரவேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

உங்களைத் தனியாக பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக்கின்றன.

பிரிவால் தாங்கள் வாடியதேல்லாம் நினைவுக்கு வந்து என்னை வாட்டுகிறது.

இனியும் உங்களை தனியாக பார்க்க என்னால் முடியாது?

என் உடம்பில் தாங்கும் தெம்பில்லை.

“வாயேன் எங்களோடு” ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான்.

ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண்டான்.

பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தான்.

பேச்சே எழவில்லை இரு கைகளும் தாமே மேலேழும்பி, குவிந்தன மனம் லேசானது.

நினைவெல்லாம் மனத்தில் அவனாகவே நிரம்பி வழிந்தது.

 வாய் மெதுவாக சுவாசத்தோடு கலந்து

‘ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” என்று உச்சரிக்கும்போது கண்கள் மூடிக்கொண்டன.

கண்கள் மூடினால் என்ன. உள்ளே தான் அவன் விஸ்வரூபனாக ராமனாக, கிருஷ்ணனாக காட்சி தருகிறானே.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!!!


Monday, April 15, 2024

இன்றைய சுபாஷிதம் 15.04.2024

 இன்றைய சுபாஷிதம்




अनल: शीतनाशाय विषनाशाय गारूडम् I
विवेको दु:खनाशाय सर्वनाशाय दुर्मति: II

அனல: ஷீதநாஶாய விஷநாஶாய காருடம் I
விவேகோ து:க்கநாஶாய சர்வநாஶாய துர்மதி: II

நெருப்பு குளிருக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது;  மரகதம் விஷத்தை அழிக்கிறது;  (சரியான) தீர்ப்பால் வலி காணாமல் போகிறது;  கெட்ட அறிவுரை எல்லாவற்றையும் அழித்துவிடும்.

Friday, April 12, 2024

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

 

 


 

 

 

 

ஸ்லோகம் 1 :  

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் 

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. 

 

ஸ்லோகம் 2 : 

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.


ஸ்லோகம் 3 : 

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி 

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 : 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை 

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 : 

மூஷிக வாகன மோதக ஹஸ்த 

சாமர கர்ண விளம்பித சூத்ர 

வாமன ரூப மஹேஸ்வர புத்ர 

விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 : 

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை 

கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 

கணபதி என்றிடக் கருமம் 

ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  : 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் 

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – 

பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் 

பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 : 

அல்லல்போம் வல்வினைபோம் 

அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் 

துயரம்போம் நல்ல குணமதிக மாம் 

அருணைக் கோபுரத்தில் மேவும் 

கணபதியைக் கைதொழுதக் கால்

ஸ்லோகம் 9 : 

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் 

கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் 

உமாஸுதம் சோக விநாச காரணம் 

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்லோகம் 10 : 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் 

இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – 

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! 

நீ எனக்குச் சங்கத் தமிழதமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 : 

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்! 

விநாயகனே வேட்கை தணிவிப்பான்! 

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் 

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

ஸ்லோகம் 12 : 

வக்ரதுண்டாய ஹீம் 

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம 

சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

 

Ganesha slokas and mantras | ஸ்லோகம் வரிகள் தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம் ஸ்ரீ விநயாகர் வழிபாடு

 ஓம் கணபதி துணை துணை!!!


சக மனிதர்களோடு
அன்பு செலுத்த
தெரியாதவன்,

ஒரு
பொழுதும் கடவுளை
உணர்வது இல்லை,
காரணம் கடவுளின்
நிலையான வடிவம் அன்புதான்!!!

சிவ மகனின் பக்தன் ஆவுடையப்பன்
       
ஓம் கணபதி!ஓம்! ஓம்!

ஓம் மூத்தோனே போற்றி!!

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி!!

ஓம் வல்லப கணபதியே போற்றி!!

ஓம் வரம்தரு நாயகனே போற்றி!!

ஓம் விக்னேஸ்வரனே போற்றி!!

ஓம் வியாஸன் சேவகனே போற்றி!!

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி!!

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி!

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...